இலங்கை கிரிக்கெட் இன்று தேசிய வீரர்களின் உடற்பயிற்சி நிலைகளை அறிய 2 கிலோ மீற்றர் தூர ஓட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது.
அதன்படி, உடற் திறன் தொடர்பில் விவாதத்திற்கு உட்பட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான 36 உறுப்பினர்களில் 32 வீரர்கள் பங்கேற்றனர்
இந்த 2 கிலோ மீற்றர் ஓட்ட உடற்தகுதி சோதனை கொழும்பு சுகததாச மைதானத்தில் இன்று நடத்தப்பட்டது.
புதிய சோதனை, விளையாட்டு வீரர்களின் உடற்தகுதியினை நிர்ணயிக்கும்.
புதிய சோதனையின்படி, வீரர்களுக்கு 2 கிலோமீட்டர் ஓட்ட தூரத்தை 8 நிமிடங்கள் 35 வினாடிகளுக்குள் கடக்க வேண்டும்.
அதேநேரம் பந்து வீச்சாளர்கள், துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் விக்கெட் காப்பாளர்களுக்கு வெவ்வேறு நேர இலக்குகள் வழங்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட்டின் உடல் செயல்திறன் மேலாளர் கிராண்ட் லுடன் தெரிவித்தார்.
உடற் சோதயைில் ஒரு வீரர் தோல்வியுற்றால், அவர் 40 நாட்களுக்குள் மற்றொரு சோதனை செய்ய முடியும். மேலும் ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள டி 20 உலகக் கிண்ணத்துக்கு முன் குறைந்தபட்ச உடற்பயிற்சி தரத்தை அடைவதே எங்கள் யோசனை என்று லுடன் கூறினார்.இதேவேளை இன்றைய உடற்தகுதி சோதனையில் பின்வரும் வீரர்கள் பங்கெடுக்கவில்லை
குசல் மெண்டிஸ் - அவர் ஒரு தனிப்பட்ட விடயம் காரணமாக கலந்துகொள்ளவில்லை.தனஞ்சய டி சில்வா - தென்னாபிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது ஏற்பட்ட காயம் காரணமாக கலந்துகொள்ளவில்லை.
அவிஷ்கா பெர்னாண்டோ - கணுக்கால் காயம் லஹிரு திரிமன்னே - கொவிட் -19 க்கு நேர்மறையான பரிசோதனையைத் தொடர்ந்து சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..