28,Apr 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலிற்கான மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும்-நவநீதம் பிள்ளை

மனித உரிமை பேரவை உறுதியாக விதத்தில் செயற்பட்டு இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலிற்கான மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். இந்நிலையில், தமிழர்களிற்கு எதிரான கடுமையான மனித உரிமை மீறல் குற்றவாளிகளை எந்த வித தயக்கமும் இன்றி பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

காயமடைந்தவர்களிற்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தவேளை எறிகணை தாக்குதலிற்கு உள்ளான மருத்துவமனைகளின் மருத்துவர்களின் உதவிக்கான இறுதி அழுகுரலை நாங்கள் செவிமடுத்திருக்கின்றோம்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி ஆறுமாதங்களும் பல முறை சர்வதேச தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளன.

நாங்கள் பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் என குற்றம்சாட்டப்படுபவர்களை இலங்கை இராணுவம் அவர்கள் வெள்ளை கொடியை காண்பித்தவேளையிலும் சுட்டுக்கொல்வதை பார்த்திருக்கின்றோம்.

தமிழ் பொதுமக்கள் மீதான கடுமையான விமான குண்டுவீச்சுகளையும், அவர்களின் வீடுகள், மருத்துவமனைகள், கோவில்கள், அடைக்கலம் கோரிய இடங்கள் அழிக்கப்பட்டதையும் நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

பயங்கரவாதிகள் என குற்றம்சாட்டப்படுபவர்கள் கைதுசெய்யப்பட்ட பின்னரும் இந்த தாக்குதல் இடம்பெற்றது.

காயமடைந்தவர்களிற்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தவேளை எறிகணை தாக்குதலிற்கு உள்ளான மருத்துவமனைகளின் மருத்துவர்களின் உதவிக்கான இறுதிக்குரலை நாங்கள் செவிமடுத்திருக்கின்றோம் என மேலும் தெரிவித்துள்ளார்.




இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலிற்கான மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும்-நவநீதம் பிள்ளை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு