உள்நாட்டு கிரிக்கெட்டில் சுமார் 20 ஆண்டுகள் விளையாடி வந்த மத்திய பிரதேச வீரா் நமன் ஓஜா (37), அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை கண்ணீா் மல்க அறிவித்தார். எனினும், டி20 லீக் போட்டிகளில் தொடா்ந்து விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.
அவா் 146 முதல்தர ஆட்டங்களில் 22 சதம், 55 அரைசதம் உள்பட 9,753 ரன்கள் விளாசியுள்ளார். லிஸ்ட் ஏ ஆட்டங்களில் 4,278, உள்நாட்டு டி20 போட்டிகளில் 2,972 ரன்கள் அடித்துள்ளார்.
இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 ஃபார்மட்டுகளிலும் தலா 1 ஆட்டத்தில் விளையாடியுள்ளார் ஓஜா. ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான், ஹைதராபாத், தில்லி அணிகளுக்காக மொத்தமாக 113 ஆட்டங்களில் களம் கண்டுள்ளார். ரஞ்சி கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை சாய்த்த விக்கெட் கீப்பா் என்ற சாதனைக்கு இன்றும் சொந்தக்காரராக உள்ளார்













0 Comments
No Comments Here ..