தற்போதைக்கு தமிழ் சினிமாவில் கைவசம் அதிக படங்கள் வைத்திருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் பிரியா பவானி சங்கர். இவரது நடிப்பில் மட்டுமே கிட்டத்தட்ட 10 படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் ஹரிஷ் கல்யாணுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் ரொமான்டிக் ஹீரோவாக ஹீரோயின்களின் உதடுகளை கடித்துக் கொண்டிருக்கும் ஹரிஷ் கல்யாண் அடுத்ததாக ஓ மணப்பெண்ணே எனும் படத்தில் நடித்துள்ளார்.தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த பெல்லி சூபுளு என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ளது ஓ மணப்பெண்ணே திரைப்படம். காதலர் தினத்தை முன்னிட்டு ஓ மணப்பெண்ணே படக்குழுவினர் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
அதில் பிரியா பவானி சங்கரை இடுப்புடன் சேர்த்து கட்டி அணைத்து தூக்கிய ஹரிஷ் கல்யாண் புகைப்படம் இணையதளங்களில் செம வைரல் ஆகியுள்ளது. ஹரிஷ் கல்யாண் நடித்த முந்தைய படங்களில் ஹீரோயின்களுடன் எப்படி ரொமான்ஸ் செய்வார் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.உதட்டைக் அடிப்பது, கட்டி உருளுவது என அவரின் ரொமான்ஸ் வேற லெவலில் இருக்கும். அதேபோல் பிரியா பவானி சங்கரையும் பதம் பார்த்து விட்டாரா என்கிறார்கள் கோலிவுட் வாசிகள். கோலிவுட் வாசிகளை விட ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் இருக்கின்றனர்.
காரணம் பிரியா பவானி சங்கருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் பிரியா பவானி சங்கர் தன்னுடைய படங்களில் நெருக்கமாக ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். இருந்தாலும் இந்த படத்தின் புகைப்படத்தை பார்க்கும் போது ஹரிஷ் கல்யாண் பிரியா பவானி சங்கரையும் விட்டு வைக்கவில்லையா என சோகத்தில் மூழ்கியுள்ளது பிரியா ஆர்மி.
0 Comments
No Comments Here ..