20,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

கொரோனா தொற்றாளர்கள் அவசர சிகிச்சை பிரிவில்

கொரோனா தொற்றுக்கு அவசர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெறும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் பொது மக்கள் சுகாதாரம் தொடர்பான பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹெமாந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

சிசிச்சையளிப்பு மத்திய நிலையங்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 11,766 கட்டில்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

அந்த கட்டில்கள் 6,747 நோயாளர்கள் தங்குவதற்கு ஏதுவான வகையில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த விசேட வைத்தியர் ஹெமாந்த ஹேரத், அவிசாவளை மற்றும் வவுனியா பகுதிகள் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சமூக தொற்றாளர்களாவர். இவ்வாறான நிலையில் இவர்கள் தொடர்பில் முறையாக அவதானித்து வருகின்றோம்´

நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 77,000 ஆக உயர்ந்த நிலையில் கொவிட் மரணங்களின் எணண்ணிக்கையும் 409 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று 6 மரணங்கள் பதிவான நிலையில் உயிரிழந்த அனைவரும் ஆண்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

மொனராகலை விலஓயா, பிலியாந்தல, நயினாமடு, அம்பலாங்கொட, பானந்துறை மற்றும் கொச்சிக்கடை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே நேற்று உயிரிழந்தனர்.

அதன்படி கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 409 ஆக உயர்ந்துள்ளது.




கொரோனா தொற்றாளர்கள் அவசர சிகிச்சை பிரிவில்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு