யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் ஏற்பட்ட பாரிய உயிர் இழப்புகளுக்கு விடுதலைப் புலிகளே பொறுப்பு என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
விடுதலைப் புலிகளுடனான மோதலில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து உலக நாடுகள் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, உண்மையான மனித உரிமைகள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என அரச தரப்பு உறுப்பினர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்காக மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொண்ட இராணுவம் மீது, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இலங்கை தனது திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க உலக நாடுகளிடம் கேட்டுக்கொண்டார்.
0 Comments
No Comments Here ..