நாவலபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பவ்வாகம பகுதியை சேர்ந்த ஆர். ஆதித்தியன் என்ற இளைஞனே நேற்று (17) மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
நாவலபிட்டிய நகரிலுள்ள மருந்தகமொன்றில் வேலை செய்யும் குறித்த இளைஞன கடந்த 16 ம் திகதி காலை வீட்டிலிருந்து வேலைக்கு சென்று மீண்டும் திரும்பி வராத நிலையில் தேடப்பட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையிலேயே அவர் இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளர்
பிரதேசவாசிகளினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 Comments
No Comments Here ..