16,Jan 2025 (Thu)
  
CH
இலங்கை செய்தி

ஸ்ரீலங்காவின் முடிவினால் கடும் அதிருப்தியில் அமெரிக்கா!

கொவிட் தொற்றால் உயிரிழந்தோரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதாக அரசாங்கம் அறிவித்து பின்னர் அதனை வாபஸ் பெற்றுக்கொண்டமை ஏமாற்றமளிக்கும் வகையிலான செயற்பாடு என ஸ்ரீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் அலிய்னா டிப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

கொவிட்டால் உயிரிழந்தோரின் சடலங்களை அடக்கம் செய்வது குறித்த அரசாங்கத்தின் தீர்மானம் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் சடலங்களை தகனம் செய்யும் ஒடுக்குமுறையான கொள்கையிலிருந்து விலகுவதற்கு அரசாங்கமும், பிரதமரும் முனைப்பு காட்டாத நிலைமை காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் உரிமையை ஜனநாயக அரசாங்கம் என்ற ரீதியில் மதிக்க வேண்டியது அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.




ஸ்ரீலங்காவின் முடிவினால் கடும் அதிருப்தியில் அமெரிக்கா!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு