16,Jan 2025 (Thu)
  
CH
சினிமா

காத்திருந்த ரசிகர்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக விருந்தளிக்கப்போகும் அம்மணி!

பிரபல நடிகையாக தென்னிந்திய சினிமாவில் கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேல் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் திரிஷா. ஆரம்பத்தில் துணை நடிகையாக வந்து படிப்படியாக வளர்ந்து முன்னணி நடிகையாக மாறினார்.

இன்று முன்னணியில் இருக்கும் நடிகர்கள் அனைவருடனும் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் திரிஷா. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ராணி போல வலம் வந்தவர்.

ஆனால் சமீபகாலமாக முன்னணி நடிகர்கள் திரிஷாவை தங்களுடைய படங்களில் ஒப்பந்தம் செய்ய யோசித்து வருகின்றனர். இதனால் தன்னுடைய கேரியரை அப்படியே மாற்றி சோலோ ஹீரோயின் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் திரிஷா நடிப்பில் அடுத்தடுத்து ராங்கி, பரமபதம் விளையாட்டு, கர்ஜனை போன்ற படங்கள் வெளிவர உள்ளன. அதனுடன் சதுரங்க வேட்டை 2 படமும் நிலுவையில் உள்ளது. விரைவில் இந்த படங்கள் ஒன்றாக அடுத்தடுத்து வெளியாக உள்ளதாம்.

இதில் சில படங்கள் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாகவும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் கோலிவுட் வாசிகள். இது ஒருபுறமிருக்க தற்போது திரிஷா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.

அதில் திரிஷா இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்ட முடிவெடுத்துள்ளாராம். மேலும் பிகினியில் பட்டையைக் கிளப்ப ரெடி என பச்சைக் கொடி காட்ட, தற்போது திரிஷாவின் வீட்டை நோக்கி படையெடுத்துள்ளதாம் தயாரிப்பாளர் கூட்டம்.




காத்திருந்த ரசிகர்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக விருந்தளிக்கப்போகும் அம்மணி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு