பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றமை தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி. மணிவண்ணன் ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், மணிவண்ணனிடம் மன்னார் மற்றும் பருத்தித்துறை பொலிஸார் மாநகர சபை முதல்வர் அலுவலகத்துக்குச் சென்று வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
சிங்கள மொழியில் வாக்குமூலத்தை பதிவு செய்ய பொலிஸார் முயற்சித்த போதும் அதற்கு மறுப்புத் தெரிவித்த யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், தான் தெரியாத மொழியில் எழுதப்பட்ட வாக்கு மூலத்தில் கையொப்பமிடமாட்டேன் என உறுதியாகக் கூறியுள்ளார்
0 Comments
No Comments Here ..