27,Apr 2024 (Sat)
  
CH
சுவிஸ்

உமிழ்நீர் சோதனைகளுக்கு ஒப்புதல் வழங்குவதை தாமதப்படுத்தும் சுவிஸ் அரசு!

சுவிட்சர்லாந்து மத்திய அரசு உமிழ்நீர் சோதனைகளுக்கு ஒப்புதல் வழங்குவதை தாமதப்படுத்துகிறது என பிரபல ஊடகமான Sonntags Zeitung உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் உமிழ்நீர் சோதனை குறிப்பாக முக்கியமானதாக இருக்கும்.

ஏனென்றால், சுவிட்சர்லாந்தில் பரவலான பெரியஅளவிலான உமிழ்நீர் சோதனை, தற்போது பொருந்தக்கூடிய கொரோனா நடவடிக்கைகளை மீண்டும் அதிகரிக்காமல் மிக வேகமாக தளர்த்தக்கூடும் என்று ஆய்வில் ETH-ன் ஆராய்ச்சியாளர்கள் காட்டுகின்றனர்.

15 முதல் 65 வயதுடையவர்களில் 80 சதவீதம் பேர் ஒவ்வொரு வாரமும் உமிழ்நீர் பரிசோதனை மூலம் பரிசோதிக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கை மூலம், R எண்ணை பாதியாக குறைக்கப்படலாம்.

இது பொருளாதார ரீதியாக பயனுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்த சோதனை நீண்ட காலமாக அங்கீகரிக்கப்பட்டு அனைத்து அண்டை நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

கொரோனா ஆன்டிஜென்களுக்கான உமிழ்நீரை பத்து நிமிடங்களுக்குள் பகுப்பாய்வு செய்யும் எளிய சோதனைக்கான ஒப்புதலுக்கு பொது சுகாதாரத்திறகான மத்திய அலுவகம் விண்ணப்பித்து வருகிறது.

மத்திய அரசு மலிவான விரைவான சோதனைகளுக்கு ஒப்புதல் வழங்குவதை தாமதப்படுத்துகிறது என SonntagsZeitung அறிக்கை வெளியட்டுள்ளது




உமிழ்நீர் சோதனைகளுக்கு ஒப்புதல் வழங்குவதை தாமதப்படுத்தும் சுவிஸ் அரசு!

1 Comments

  • Nice Article.

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு