20,Jun 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

கோட்டாபய - மஹிந்த அரசுக்கு பெரும் அதிர்ச்சி!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தலுக்கு முன்னர் கூட்டணி கட்சிகளுடன் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டு உடன்படிக்கைகள் தற்போது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை எனவும் அந்த உடன்படிக்கைகள் மீறப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையில் தற்போது கலந்துரையாடல்கள் எதுவும் நடப்பதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் தற்போது மிகப் பெரியளவில் ஊழல், மோசடிகள் நடக்கின்றன. காணிகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. உறவினர்கள், நண்பர்கள் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு செயற்பட்டால், கூட்டணி கட்சிகள் தனியான இடங்களில் கூட்டங்களை நடத்துவது தொடர்ந்தும் நடந்தால், எதிர்காலத்தில் நிலைமை மோசமடையும் எனவும் லக்ஷ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார்.




கோட்டாபய - மஹிந்த அரசுக்கு பெரும் அதிர்ச்சி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு