05,Apr 2025 (Sat)
  
CH
உலக செய்தி

பேரிடர் மாகாணமாக டெக்சாஸ்.!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பனிப்பொழிவை பெரும் பேரழிவு என ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். டெக்சாஸ் மாகாணம் கடுங்குளிர் மற்றும் பனிப்பொழிவால் ஸ்தம்பித்து போயுள்ளது. இதனால் டெக்சாஸ் மாகாணம் பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு மிக மோசமான அளவிற்கு குறைந்த வெப்பநிலை பதிவாகி கடுங்குளிர் வாட்டிவதைத்து வருகிறது. கடந்த ஒருவாரமாக மின் இணைப்பு இல்லாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வணிக நிறுவனங்களிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதால் தொழில்களும் முடங்கியுள்ளன.

 உறைபனி காரணமாக குடிநீர் குழாய்கள் உறைந்துவிட்டன. சில இடங்களில் உறைந்த குழாய்கள் வெடித்து பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 10 இலட்சத்துக்கும் அதிகமானோர் குடிநீர் பிரச்னையில் சிக்கித் தவித்து வருகின்றன. டெக்சாஸ் மாகாணம் பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த மாகாணத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கி நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஜனாதிபதி ஜோ பைடன் டெக்சாஸ்க்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.




பேரிடர் மாகாணமாக டெக்சாஸ்.!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு