யுவதியொருவரை கடத்த முயற்சித்த இராணுவ சிப்பாய் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கஹதுடுவ – மாகம்மன தர்மலங்கார பகுதியில் நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹோமாகம தனியார் நிறுவனமொன்றில் கடமையாற்றும் 20 வயதான யுவதியை அவரது இருப்பிடத்திற்கு அழைத்து செல்வதாக கூறி, முச்சக்கரவண்டியொன்றில் இராணுவ சிப்பாய் அழைத்து சென்றுள்ளார்.
தனது இருப்பிடம் வந்துவிட்டதாக தெரிவித்து, முச்சக்கரவண்டியை நிறுத்துமாறு யுவதி, கூறிய போதிலும், முச்சக்கரவண்டியை நிறுத்தாது, சந்தேகநபர் செலுத்தியுள்ளார்.
இதையடுத்து, குறித்த யுவதி முச்சக்கரவண்டியிலிருந்து பாய்ந்து, கூச்சலிட்டுள்ளார்.
இந்த நிலையில், சம்பவ இடத்தில் பிரதேச மக்கள் ஒன்று கூடி, சந்தேகநபரை பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த கஹதுடுவ பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை கோழிகளை திருடிய மற்றுமொரு இராணுவ சிப்பாயும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..