எல்லாருக்கும் பாலியல் பற்றிய நிறைய சந்தேகங்கள் இருக்கும். இதுவரை தம்பதிகளின் பாலியல் வாழ்க்கையை நிறைய காரணிகள் பாதிக்கின்றன. அந்த வகையில் உடல் பருமன் கூட தம்பதிகளின் பாலியல் வாழ்க்கையை பாதிக்கிறது என ஆய்வு கூறுகிறது.
அதிகபட்ச உடல் எடை உங்க பாலியல் செயல்திறனை பாதிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா. அதிகபட்ச உடல் எடை இருப்பவர்கள் தங்கள் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்த முடியுமா இல்லையா இது குறித்து ஆராய்வோம். உங்க எடை அதிகரிப்பு பாலியல் செயல்திறனை பல்வேறு வழிகளில் பாதிக்கிறது. ஆனால் இந்த விஷயம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபட்டவை. மெலிதான ஆண்களை விட அதிக எடை கொண்ட ஆண்களுக்கு உடலுறவு கொள்வது மிகவும் கடினமாக இருக்கும். மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, பாலியல் செயலிழப்பு என்பது உடல் பருமனின் ஒரு பக்க விளைவு ஆகும்.
ஆண்கள் அதிக எடையைச் சுமக்கும்போது விறைப்புத்தன்மையால் பாதிக்கப்படலாம். இதன் விளைவாக கவலை மற்றும் மோசமான பாலியல் செயல்திறன் ஆகியவற்றால் இந்த ஆண்கள் பாதிக்கப்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். பருமனான ஆண்களும் ஆண்குறி நோயால் பாதிப்படைகின்றனர்.
பெண்களைப் பற்றிய பல ஆராய்ச்சி ஆய்வுகள் அதிக உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) பாலியல் பிரச்சினைகளுடன் தொடர்புடையது என்பதைக் காட்டுகிறது. சில ஆய்வாளர்கள் இவை பிறப்புறுப்பு பகுதியில் மோசமான பாதிப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள். உடலுறுவில் சிரமம், பாலியல் திருப்தி குறைவதற்கும் உடல் பருமன் வழி வகுக்கிறது.
அதிக எடை கொண்டவர்கள் பாலியல் பிரச்சினைகளை சந்திப்பவராக இருந்தால், உங்கள் உடல் எடையானது உடலுறவை பாதிக்கிறது என்பதை உணர்ந்து உங்கள் மருத்துவரிடம் விவாதிக்கலாம்.
0 Comments
No Comments Here ..