15,Jan 2025 (Wed)
  
CH
ஆரோக்கியம்

இத சாப்பிடுங்க:இந்த அற்புதமெல்லாம் உங்க உடம்புல நடக்கும்...

இந்த முலாம்பழம்னில் ஆரோக்கிய நன்மைகள் பல உண்டு. கோடைகாலத்தில் இந்த பழத்தை நாம் உண்ணும் போது நமக்கு பல்வேறு ஆரோக்கிய பலன்கள் கிடைக்கின்றன. இது தாகத்தை தீர்க்கும் ஒரு மிகச்சிறந்த பழமாகும். இந்த பழம் பெரும்பாலும் கோடை காலங்களில் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. இந்த பழத்தில் எவ்வளவு சுவை நிரம்பி இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆரோக்கிய குணமும் நிரம்பியுள்ளது.

இந்த பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் ஆகிய சிறந்த சத்துக்கள் உள்ளன. மேலும் இதில் வைட்டமின்கள் பி 1, பி 6 மற்றும் கே, ஃபோலேட், காப்பர், மெக்னீசியம் மற்றும் உணவு நார்சத்துகளும் நிறைந்து காணப்படுகின்றன. இந்தப் பழத்தில் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பதை பற்றி விரிவாக பார்ப்போம் வாருங்கள்.

இந்தப் பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக நிறைந்துக் காணப்படுகிறது. இதனால் கோடை காலங்களில் நமது உடல் நீர்ச்சத்துடன் இருக்க இந்த பழம் பெரிதும் உதவுகிறது. அதிக வெப்ப காலங்களில் நமது உடலை குளிர்வித்து வெப்பத்தில் இருந்து பாதுகாக்கிறது. இதில் அடங்கியுள்ள முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவையான சத்துக்களை நமது உடலுக்கு வழங்குகிறது.

​இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த

இந்த பழத்தில் பொட்டாசியம் சத்து நிறைந்து காணப்படுகிறது. பொதுவாக பொட்டாசியம் உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும். எனவே இந்த பழத்தை நாம் உணவுகளில் சேர்த்துக் கொள்ளும் போது, நமது உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இந்த பழம் நமக்கு பெரிதும் உதவுகிறது.

​கண் ஆரோக்கியத்திற்கு

இப்பொழுதெல்லாம் சிறு வயதிலேயே கண் பிரச்சினைகளினால் இளைஞர்கள் கண்ணாடி அணிய நேரிடுகிறது. கண்ணுக்கு மிகச்சிறந்த ஆரோக்கியம் தரும் மருந்தாக இந்த முலாம்பழம் உள்ளது. இந்த முலாம்பழம்னில் விட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்து இருப்பதால், இது கண் பார்வையை மேம்படுத்தவும், கண் புரை போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கவும் உதவுகிறது. கண் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்பதால் இந்த பழத்தை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது சாலச் சிறந்தது.

 

 

 

​எடை இழப்புக்கு

நேரத்திற்கு உணவு உண்ண இயலாமை, நேரமின்மை காரணமாக சத்தற்ற உணவு ஆகிய பழக்க வழக்கங்களுக்கு இப்போது நாம் பழகி வருகிறோம். இது எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. மேலும் எடை இழப்புக்கு தேவையற்ற வழிகளில் பலன்களை தேடி பயனற்றுப் போகிறோம். இந்த முலாம்பழம் எடை குறைப்புக்கு நல்ல பலன் தருகிறது. இந்த பழத்தில் மிக குறைந்த அளவே கொழுப்பு சத்து இருப்பதால் எடை குறைப்பில் இது பெரும் பங்கு வகிக்கிறது.

​நீரிழிவு நோயை கட்டுப்படுத்த

தற்போது டயாலிசிஸ் செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சில குறிப்புகளில் காண முடிகிறது. இதற்குக் காரணம் நம் உணவு பழக்க வழக்கங்களும் தான். முறையான உணவு என்றுமே நமக்கு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். இந்த பழம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் இந்த பழம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

​நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

வைட்டமின் சியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உள்ளது. இந்த தன்மை இந்த பழத்தில் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது. மேலும் இந்த வைட்டமின் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை தூண்டவும் உதவுகிறது. இதனால் நமது உடலில் நோய் தொற்று ஏற்படாமல் இது எதிர்த்துப் போராடுகிறது.

​மலச்சிக்கலை போக்க உதவும் முலாம்பழம்

ஒருவருக்கு மலச்சிக்கல் பிரச்சினை உள்ளது என்றால் அதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இதை சரிசெய்ய ஆரோக்கியமற்ற மருந்துகளை எடுத்துக் கொள்வதை தவிர்த்து, ஆரோக்கியமான முலாம்பழம் போன்ற பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பழத்தில் நார்ச்சத்து நிரம்பி காணப்படுகிறது. இதை உங்கள் உணவில் அதிக அளவில் எடுத்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நீங்கள் விடுபடலாம்.

​சிறுநீரக கற்கள் ஏற்படாமல் தடுக்க

முலாம்பழம்னில் நிறைந்துள்ள ஆக்ஸிகைன் எனப்படும் சத்து சிறுநீரக கோளாறு மற்றும் கற்களை குணப்படுத்த உதவும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே சிறுநீரகத்தில் பிரச்சனை வருவதற்கு காரணம் நமது உடலில் குறைந்த அளவில் நீர்ச்சத்து காணப்படுவதே. இந்தப் பழத்தில் அதிக அளவு நீர்ச்சத்து நிரம்பியிருப்பதால் இது சிறுநீரகத்தை சுத்தபடுத்த நமக்கு உதவுகிறது.

​கர்ப்ப காலத்தில்

கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலங்களில் ஒருசில பழங்களை உணவுகளில் சேர்த்துக் கொள்ளும்போது அவர்களுக்கு சளி போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் எந்தப் பழத்தை சாப்பிடுவது என்ற அய்யம் சிலருக்கு ஏற்படலாம். இந்த முலாம்பழம்னில் அதிக போலட் சத்து நிரம்பி உள்ளதால் உடலில் அதிகப்படியான சோடியத்தை அகற்ற இது உதவுகிறது.

​மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தசைப்பிடிப்பு

மாதவிடாய் கால கட்டங்களில் சில பெண்களுக்கு அதிகமான தசை பிடிப்புகள் ஏற்படும். இதனால் இவர்களுக்கு அன்றாட வேலைகளை சரிவர செய்வதில் சிறிது சிரமம் ஏற்படுகிறது. இந்த பழத்தில் நிரம்பி இருக்கும் அண்டிகோகுலன்ட் பண்புகள், கட்டிகளைக் கரைய செய்து தசைப்பிடிப்புகளை சரி செய்கிறது.

​நல்ல தூக்கத்திற்கு உதவும்

தூக்கமின்மை என்பதும் இந்த காலகட்டத்தில் மிகப் பெரும் பிரச்சினையாக உள்ளது. அதிக நேரம் தொலைக்காட்சி அல்லது கைபேசிகளில் நமது நேரத்தை செலவிடுவதும் ஒரு காரணம் என்றாலும், இயற்கையாகவே இந்த தூக்கமின்மை பிரச்சனையை போக்கும் சக்தி இந்த முலாம்பழம் பழத்திற்கு உண்டு. இந்த பழத்தை நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, இது நரம்புகள் மற்றும் தசைகளை தளர்த்தி சீரான தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.

​இதய நோய் அபாயம் குறைய

முலாம்பழம் பழத்தில் உள்ள அடினோசின் ரத்தத்தை மென்மையாக்கும் பண்புகளை கொண்டுள்ளது. இதனால் நமது உடலில் இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க இது உதவுகிறது. இதய பிரச்சனைகள் வராமல் தடுக்க இதை உணவில் சேர்த்துக்கொள்வது நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

​மனஅழுத்த நிவாரணியாக செயல்படும்

மன அழுத்தப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இந்த முலாம்பழம் ஒரு சிறந்த நிவாரணியாக இருக்கும். இந்த பழத்தை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், இது நமது மூளைக்கு ஆக்சிஜன் ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. இதனால் நமது உடல் அதிக ஓய்வெடுக்கவும், நாம் செய்யும் காரியங்களில் அதிக கவனம் செலுத்தவும் உதவுகிறது.

 இப்பொழுது இந்த பழத்தை உட்கொள்வதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் இந்த பழத்தை எந்தெந்த நேரத்தில் நீங்கள் உட்கொள்ளலாம் என்பதைப் பற்றி இப்பொழுது நான் உங்களுக்கு கூறுகிறேன்.

இந்த பழத்தை காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இது உடலுக்கு அதிக நீர்ச்சத்தை அளிப்பதால் இந்த காலகட்டத்தில் இதை எடுத்துக் கொள்வது சிறந்த முறையில் பயன் அளிக்கும்.

கோடைக்காலங்களில் இளநீர், தர்பூசணி, முலாம்பழம் போன்ற ஆரோக்கியமான பழங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டு, நீர்ச்சத்துடன் மேலே கூறிய ஆரோக்கிய பலன்களையும் பெற்றிடுங்கள். முக்கியமாக உங்கள் வீட்டு குழந்தைகளின் உணவுகளில் இப்போதிருந்தே இந்த ஆரோக்கியம் நிறைந்த பழம் உணவில் உள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.




இத சாப்பிடுங்க:இந்த அற்புதமெல்லாம் உங்க உடம்புல நடக்கும்...

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு