13,May 2025 (Tue)
  
CH
இலங்கை செய்தி

பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையே ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்து..

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது, இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து ஒப்பந்தங்கள் நேற்று (23) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாகிஸ்தான் பிரதமர் கௌரவ இம்ரான் கான் ஆகியோரின் முன்னிலையில் இரு நாட்டு பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

1.பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு இடையிலான சுற்றுலா ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

2.இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் முதலீட்டு சபைக்கும் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் முதலீட்டு சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

3.இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.டி.ஐ), மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் கராச்சி பல்கலைக்கழகம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

4.கொழும்பு தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் இஸ்லாமாபாத்தின் COMSATS பல்கலைக்கழகத்திற்கு இடையிலான ஒத்துழைப்பு

5.கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் லாகூர் பொருளாதார கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்




பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையே ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்து..

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு