15,Jan 2025 (Wed)
  
CH
ஆரோக்கியம்

ஆண்மை பெருக்கும் கல்யாண முருங்கை, இன்னும் நிறைய நன்மைகளை படிச்சு தெரிஞ்சுகொள்ளுங்க.!

கல்யாண முருங்கை முள் முருங்கை, முருக்க மரம், கல்யாண முருக்கன், முள் முருக்கு என்று பல பெயர்களில் கிராமங்களில் அழைக்கப்படுகிறது. இந்த மரத்தின் இலை, விதை, பட்டை என அனைத்துமே மருத்துவ பயன்களை கொண்டிருக்கின்றன.,

இவை வெற்றிலை, மிளகு என கொடிவகை தாவரங்கள் பயிரிடப்படும் போது அவை வளர்வதற்கு ஏற்ப இவை வளர்க்கப்படுகிறது. காரச்சுவையும் வெப்பத்தன்மையும் கொண்ட இவை பெண்களுக்கான மரம் என்று சொல்லப்படுகிறது. இது குறித்து ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இதையும் இந்த பதிவில் இணைக்கிறேன். இந்த கல்யாண முருங்கை செய்யும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

சமீப வருடங்களாக குழந்தையின்மை பிரச்சனையில் பெண்களுக்கு இணையாக ஆண்களும் பல பிரச்சனைகளை கொண்டிருக்கிறார்கள். பெரிய குறைபாடு என்று இல்லாவிட்டாலும் தாம்பத்திய வாழ்க்கையில் நாட்டமின்மை, விந்தணுக்கள் வீரியம் குறைவும், ஆண்மை குறைவு என பலபிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.

ஆண்களின் இனப்பெருக்க மண்டலம் சீராக செயல்படவே அந்தகாலத்தில் உணவுகள் வழியாகவே இந்த குறைபாடில்லாமல் பார்த்துகொண்டார்கள். தற்போது மோசமான உணவு பழக்கங்களும் இந்த குறைபாட்டை அதிகரித்துவிட்டது.

உணவு வழியாக ஆண்மை பெருக பல மூலிகைகள் உண்டு. அதில் கல்யாண முருங்கையும் ஒன்று. கல்யாண முருங்கை இலையை எடுத்து வந்து தினசரி 3 எண்ணிக்கை வீதம் மிக்ஸியில் அரைத்து சாறெடுக்கவும். மாதுளை பழச்சாற்றில் கசகசாவை பொடித்து உடன் இந்த இலைச்சாறு சேர்த்து இனிப்புக்கு தேன் கலந்து குடித்தால் ஆண்மை பெருகும். தாம்பத்ய உறவிலும் ஆர்வம் உண்டாகும். இதை தொடர்ந்து 21 நாட்கள் வரை குடிக்கலாம்.

பெண்களின் கருப்பை பிரச்சனைகளில் உண்டாகும் அனைத்துக்கும் கல்யாண முருங்கை உதவும். அதனால் தான் இதை பெண்களுக்கான மரம் என்கிறார்கள். மாதவிடாய் வலி, ஒழுங்கற்ற மாதவிடாய், உதிரபோக்கு பிரச்சனை, கருப்பை கட்டி, குழந்தைப்பேறு இன்மை என ஒவ்வொன்றுக்குமே இவை சிறந்த பலன்களை தரக்கூடும். இதை எப்படி எடுத்துகொள்வது என்பது குறித்து ஏற்கனவே தெளிவாக பார்த்திருக்கிறோம். அதையும் இங்கு இணைக்கிறேன்.

 குழந்தைப்பேறு வேண்டும் பெண்கள் கல்யாணமுருங்கை பூவுடன் மிளகு சேர்த்து அரைத்து வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பிரசவத்துக்கு பிறகு குழந்தைக்கு தாய்ப்பால் சுரப்பில் பற்றாக்குறையில்லாமல் இருக்க கல்யாண முருங்கை எடுத்துகொள்ளலாம். முருங்கை இலை போன்று கல்யாண முருங்கை இலையையும் பொரியலாக்கி சாதத்தில் பிசைந்து சாப்பிடுவதன் மூலம் தாய்ப்பால் சுரக்கும்.

குழந்தைக்கு மூன்று மாதங்கள் தொடங்கும் போதே தாய்ப்பால் சுரப்பு குறையத்தொடங்கும். குழந்தை வளர்வதால் குழந்தையின் வயிற்றை நிரப்பும் அளவுக்கு தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கலாம்.

வாரம் மூன்று முறை இந்த கீரையை பொடியாக நறூக்கி நெய்விட்டு வதக்கி சாம்பார் வெங்காயம் தாளித்து தேங்காய்த்துருவல் சிறிது ( தேவையெனில் ) சேர்த்து வதக்கி சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.

புழுக்களை வெளியேற்ற செய்யும்

வயிற்றில் இருக்கும் பூச்சிகளை வெளியேற்ற கல்யாண முருங்கை உதவும். அதிலும் குழந்தைகளுக்கும் இதை கொடுக்கலாம். இயற்கையாகவே மாதம் ஒரு முறை இதை மருந்தாக கொடுக்கலாம். கல்யாண முருங்கை இலை சாற்றை 10 மில்லி அளவு எடுத்து வெதுவெதுப்பான நீர் கால் டம்ளரில் கலக்கி இனிப்புக்கு தேன் சேர்த்து கொடுத்தால் குழந்தைகள் குடித்துவிடுவார்கள்.

தொடர்ந்து இரண்டு நாள் காலை வேளையில் இதை கொடுத்து முதல் இரண்டு மணி நேரத்துக்கு வேறு எதையும் கொடுக்க கூடாது. பிறகு வயிற்றீல் இருக்கும் புழுக்கள் வெளியேறும். அன்றைய நாள் பத்திய சாப்பாடு போல் மோர் சாதம் மட்டுமே கொடுக்க வேண்டும். பெரியவர்களும் இதை குடிக்கலாம்.

சரும நோய்களை தீர்க்க

சருமத்தில் சொறி, சிரங்கு போன்ற பிரச்சனைகள் இருக்கும் போது அதற்கு கை வைத்தியமாக மூலிகையை தேடும் போது இவை உங்களுக்கு உதவக்கூடும். அதிலும் குழந்தைகள் மண்ணில் விளையாடும் போது சருமத்தில் சொறி பிரச்சனையை அதிகமாகவே சந்திப்பார்கள்.

கல்யாண முருங்கை இலையை அரைத்து சாறை எடுக்கவும். இதில் மஞ்சளை அரைத்து சேர்த்து சொறி சிரங்கு என சரும பாதிப்பு இருக்கும் இடங்களில் தடவி விடவும். அவை உலர்ந்ததும் சருமத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி குளித்தால் சரும நோய் நீங்கும்.

 கல்யாண முருங்கை இலை உணவாக

இதை மருந்தாக அதிலும் தொடர்ந்து எடுப்பதாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனை அவசியம். அதே நேரம் இதை உணவாக எடுத்துகொள்வதன் மூலம் பக்கவிளைவில்லாத ஆரோக்கியம் கிடைக்கும்.

இதை அடையாக, சூப் போன்று செய்ய பார்த்தோம். இதை மாலை நேர சிற்றூண்டியாக வடை போன்றும் செய்து சாப்பிடலாம். கீரை வடை போன்று கல்யாண முருங்கை இலையையும் வடையில் சேர்த்து செய்யலாம்.

இதை உணவாக எடுத்துகொண்டாலே நெஞ்சில் இருக்கும் சளி கரைந்து வெளியேறக்கூடும். இனி கல்யாண முருங்கையை கேட்டு வாங்கி சாப்பிடுங்கள்.

 

 




ஆண்மை பெருக்கும் கல்யாண முருங்கை, இன்னும் நிறைய நன்மைகளை படிச்சு தெரிஞ்சுகொள்ளுங்க.!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு