03,May 2024 (Fri)
  
CH
உலக செய்தி

மாராடைப்பால் இறந்த பெண்ணை தூக்கிலிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட பெண் ஒருவர் மாராடைப்பால் இறந்த பின்னரும் அவரை மீண்டும் தூக்கிலிடப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சாரா இஸ்மாயில் என்ற பெண் தன்னையும், தனது குழந்தையும் துன்புறுத்தி வந்த கணவரை தற்காப்புக்காக கொலைச் செய்திருக்கிறார். இவ்வழக்கில் அவருக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.

அவருக்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து அவரது சட்டத்தரணி தனது சமூக வலைதள பக்கத்தில் வேதனையான பதிவை பகிர்ந்திருக்கிறார். அதில் சாராவை தூக்கிலிடுவதற்கு முன்பு, மற்றவர்களை தூக்கிலிடும் காட்சியை பார்க்க வைத்துள்ளனர். இதில் ஏற்பட்ட அதிர்ச்சியில் வரிசையில் 16 வது நபராக நின்ற சாராவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்திருக்கிறார். ஆனால் அதிகாரிகள் அவர் மரணித்ததையும் பொருட்படுத்தாமல் அவரை மீண்டும் தூக்கு கயிற்றில் ஏற்றி சாரா அமர்ந்திருக்கும் நாற்காலியை அவரது மாமியார் காலால் எட்டி உதைத்து தூக்கிலிடப்பட்டிருக்கிறார்.

ஈரானை பொறுத்தவரை அங்கு கொலை செய்தவரின் மரணம் அவரால் கொல்லப்பட்டவரின் நெருங்கிய உறவுகளுக்கு முன் நிகழ வேண்டும். அப்போதுதான் அக்குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. சாராவுக்கு நிகழ்ந்தது போன்று பல மனித உரிமை மீறல்கள் ஈரான் சிறையில் அரங்கேறி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.




மாராடைப்பால் இறந்த பெண்ணை தூக்கிலிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு