இலங்கை சுதந்திர தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தின் தலைவராக செயற்பட்ட காலத்தில் குறித்த தொழிற்சங்கத்திற்கு சொந்தமான 39 இலட்சம் ரூபா பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றச்சாட்டுக்களில் இருந்து அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
4 வருடங்களாக இடம்பெற்ற குறித்த வழக்கில் இருந்து நீண்ட விசாரணைகளின் பின்னர் அமைச்சரை விடுதலை செய்வதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா பட்டபெதிகே உத்தரவிட்டுள்ளார்.
பிரதிவாதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் சரியான ஆதரங்கள் சமர்பிக்காத காரணத்தினால் அவரை விடுதலை செய்வதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.













0 Comments
No Comments Here ..