06,Apr 2025 (Sun)
  
CH
இலங்கை செய்தி

பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமயில் இடம் பெற்ற இளைஞர் சம்மேளன பொதுக்கூட்டம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நான்காவது வருடாந்த சம்மேளன பொதுக்கூட்டமும் மன்னார் தேர்தல் தொகுதிக்கான இளைஞர் சம்மேளன பொதுக்கூட்டம் காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான கே. காதர் மஸ்தான் தலைமயில் இடம் பெற்ற இளைஞர் சம்மேளன பொது கூட்டத்தில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அசோக பிரியந்த கலந்து கொண்டிருந்தார்.

இதன் போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மன்னார் மற்றும் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.இதன் போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டதோடு,இளைஞர் யுவதிகளின் செயற்பாடுகள்,எதிர் கால நிலைப்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டடது.




பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமயில் இடம் பெற்ற இளைஞர் சம்மேளன பொதுக்கூட்டம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு