வவுனியா ஶ்ரீநகர் கிராமமக்கள் தமது காணி உறுதி கோரிக்கைகளை தீர்க்குமாறு வலியுறுத்தி மனிதச்சங்கிலி போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். வவுனியா மாவட்டசெயலகத்திற்கு முன்பாக இன்று காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நூற்றுக்கணக்கான மக்கள் குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்ததுடன், ஶ்ரீநகர் மக்கள் மனிதர்கள் இல்லையா, காணி உறுதிபத்திரத்தை வழங்கு, 26 வருடங்களாக எம்மை ஏமாற்றுவது சரியா,நியாயமான கோரிக்கைகளிற்கு தீர்வு என்ன போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்
0 Comments
No Comments Here ..