29,Mar 2024 (Fri)
  
CH
ஆரோக்கியம்

கொவிட் வைரஸ் தொற்றினால் -கர்ப்பிணித்தாய்மார்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டில் தற்போது பரவிவரும் புதிய வீரியம் கொண்ட கொவிட் வைரஸினால், கர்ப்பிணித்தாய்மார்களுக்கு அச்சுறுத்தல் அதிகம் உள்ளதாகவும் அவர்களின் நுரையீரலுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் மகப்பேற்று விசேட வைத்தியர் மயுரமான தெவோலகே தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால், கர்ப்பணித்தாய்மார்கள் பாதிக்கப்படுவதற்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான கர்ப்பிணித்தாய்மார்களில், அதிகளவானோருக்கு, நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கொவிட் வைரஸ் தாக்கத்திற்குள்ளான மூன்று கர்ப்பிணித்தாய்மார்கள், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வைரஸ் தாக்காமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றிக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கர்ப்பணித்தாய்மார்களுக்கு ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்படுமாக இருந்தால், உடனடியாக கொவிட் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் அவர் கோரிக்;கை விடுத்துள்ளார்.  





கொவிட் வைரஸ் தொற்றினால் -கர்ப்பிணித்தாய்மார்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு