கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2021 மாச்சின் 4.1 சதவீதத்திலிருந்து 2021 ஏப்பிறலில் 3.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.
இது, உணவு வகையிலுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த வீழ்ச்சிகள் மூலம் தூண்டப்பட்டிருந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2021 மாச்சின் 9.6 சதவீதத்திலிருந்து 2021 ஏப்பிறலில் 9.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 ஏப்பிறலில் 1.8 சதவீதத்தில் மாற்றமின்றிக் காணப்பட்டது.
ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 மாச்சின் 4.0 சதவீதத்திலிருந்து 2021 ஏப்பிறலில் 3.9 சதவீதத்திற்கு சிறிதளவு வீழ்ச்சியடைந்தது.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றமானது 2021 ஏப்பிறலில் சிறிதளவில் வீழ்ச்சியடைந்தது. இதற்கு உணவு வகைப் பொருட்களில் அவதானிக்கப்பட்ட விலை வீழ்ச்சிகளே காரணமாகும். உணவு வகையினுள் தேங்காய், காய்கறிகள், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், என்பனவற்றின் விலைகள் 2021 ஏப்பிறலில் வீழ்ச்சியடைந்தன. அதேவேளை, உணவல்லா வகையிலுள்ள பொருட்களின் விலைகள் மாத காலப்பகுதியில் அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தமைக்கு போக்குவரத்து (உராய்வு நீக்கி எண்ணெய்) துணை வகையில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்களே முக்கிய காரணமாகும்.
பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினை பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2021 மாச்சின் 3.1 சதவீதத்திலிருந்து 2021 ஏப்பிறலில் 3.0 சதவீதத்திற்கு சிறிதளவு வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கம் 2021 ஏப்பிறலில் 3.0 சதவீதத்தில் மாற்றமின்றிக் காணப்பட்டது.
முழுவடிவம்
https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/press/pr/press_20210430_inflation_in_april_2021_ccpi_t.pdf
0 Comments
No Comments Here ..