சிலருக்கு உதடுகள் கருப்பாகவோ, சிலருக்கு வெடிப்புத் தன்மையாகவோ இருக்கும். சிலருக்கு கரும் சிவப்பாகவோ, சிலருக்கு வெந்து போனது போலவோ இருக்கும். சிலருக்கு வெண்மை படா்ந்தது போல இருக்கும். இப்படி உதடுகளில் காணப்படும் பிரச்சினைகளை சரிசெய்ய உதட்டை பாதுகாக்க சில டிப்ஸ் இதோ.
வெண்ணெய் அல்லது நெய் பூசி வர உதடுகள் மென்மையாகலாம்.
வெடிப்பாக இருக்கும் உதடுகள் மாற பன்னீா், நெய், கிளிசரின் இவைகளை கலந்து உதடுகளில் தடவி வரவேண்டும்.
பீட்ரூட் கிழங்கை வெட்டி உதடுகளில் தடவி வர சிவப்பழகு கொடுக்கும்.
உதடுகளின் கருமை நிறம் மாற கொத்தமல்லி சாறை இரவு நேரங்களில் உறங்கச்செல்லும்போது பூசி வரவேண்டும்.
அசல் ரோஜா இதழ்களை பால் விட்டு அரைத்து பூசிவர உதட்டில் உள்ள வெடிப்புகள் நாளடைவில் மறையும்.
சந்தனத்தை பன்னீருடன் கலந்தும் பூசிவரலாம்.
ரோஜா இதழ் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தடவி வர மென்மையான சிகப்பு உதடுகளாக மாறும் வெடிப்பு வறட்சி போக பாலாடையை தினசாி தடவி வரலாம்.
0 Comments
No Comments Here ..