19,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

முல்லைத்தீவினை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 30 பேர்கைது

கடற்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து 2021 மே 13 மற்றும் 14 திகதிகளில் சிலாபம், சமிதுகம பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டிற்கு குடிபெயர முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 30 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த 5 பேர்

01ஆம் வட்டாரம் நாவல்காடு முள்ளியவளை,மற்றும் 01ஆம் வட்டாரம் முள்ளியவளையினைசேர்ந்நபர் ஒருவரும்,01ஆம் வட்டாரம் கோம்பாவில் புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த இருவரும் நெட்டாங்கண்டல் பகுதியினை சேர்ந்தவருமாக முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த 5 இளைஞர்களும் அடங்குகின்றார்கள்.

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை இணைந்து 2021 மே 13 மற்றும் 14 திகதிகளில் சிலாபம், சமிதுகம பகுதியில் நடத்திய இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டிற்கு குடிபெயர முயற்சித்ததாக சந்தேகப்படுகின்ற 14 நபர்கள் அவர்களுக்கு தங்குமிடம் வசதிகள் வழங்கிய வீட்டின் உரிமையாளருடன் கைது செய்யப்பட்டனர்.

இன்று (2021 மே 14), கடற்படை மற்றும் கடலோர காவல்படை சிலாபம் பொலிஸாருடன் இணைந்து மேலும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், அப்போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டிற்கு குடிபெயர முயற்சித்ததாக சந்தேகப்படுகின்ற மேலும் 15 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட 30 ஆண் சந்தேகநபர்களும் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, முல்லைதீவு மற்றும் புத்தலம் பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கைக்காக சிலாபம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





முல்லைத்தீவினை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 30 பேர்கைது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு