30,Apr 2024 (Tue)
  
CH
சமையல்

சீஸ் செய்யலாம் வாங்க...

என்னதான் சீஸ் விருப்பமானது என்றாலும் அது விலை அதிகம் என்பதால் அடிக்கடி வாங்க முடியாது. அந்த கவலை இனிமே இல்ல. இன்று வீட்டிலேயே அரை மணிநேரத்தில் சீஸ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பன்னீர் - 150 கிராம்

 அடித்த முட்டை - 3 ஸ்பூன்

உப்பு கலந்த வெண்ணெய் - 200 கிராம்

பேக்கிங் சோடா - 1/4 ஸ்பூன்

உப்பு - சுவைக்கு ஏற்ப

செய்முறை:

பன்னீரை உடைத்து தூளாக்கிக்கொள்ளவும்.

அதில் அடித்த முட்டையை ஊற்றவும்.

பின் உப்பு கலந்த வெண்ணெய் சேர்க்கவும்.

அடுத்ததாக பேக்கிங் சோடா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

இந்தக் கலவையை தற்போது நன்கு பிசைந்துகொள்ளவும்.

தற்போது அகலமான பாத்திரத்தில் மற்றொரு பாத்திரம் வைக்கும்படியாகத் தண்ணீர் ஊற்றவும். காரணம், இவ்வாறு செய்வதால் சீஸ் கிளறும்போதுஅடிப்பிடிக்காது.

தண்ணீர் நன்கு கொதிக்கும்போது மற்றொரு பாத்திரத்தை அதில் வைக்கவும்.

தற்போது பிசைந்த பன்னீர் பேஸ்டை அதில் போட்டு நன்கு கிளறவும். இடைவெளியின்றி கிளறிக் கொண்டே இருக்கவும்.

15 நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருந்தால் உருகி பேஸ்ட் வடிவில் சீஸ் பதத்திற்கு வரும்.

பின் அதை ஒரு டப்பாவில் அடைத்து ஃபிரிஜில் வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




சீஸ் செய்யலாம் வாங்க...

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு