அவசரமாக தேவைப்படும் ஒட்சிசன் சிலிண்டர்கள் உட்பட முக்கியமான உபகரணங்களை யுனிசெப் நிறுவனம் அவுஸ்திரேலியாவின் உதவியுடன் சுகாதார அமைச்சுக்கு வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு உதவும் வகையில் இந்த பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களத்தின் நிதியுதவியுடன் கொள்வனவு செய்யப்பட்ட இந்த பொருட்களை இலங்கைக்கான அவுஸ்திரேலிய பணிக் குழுவின் தலைமை அதிகாரி டேவிட் ஹோலியும், ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளர் எம்மா பிரிகாமும், யுனிசெப் நிறுவனத்தின் பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டியும் நேற்று சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாரச்சி இடம் வழங்கி வைத்தனர்.
291 ஒட்சிசன் சிலிண்டர்களும், 342 ஒட்சிசன் ரெகுலேட்டர் களும் 2490 முகக் கவசங்களும், 20 தீயணைப்பு கருவிகளும் இதில் உள்ளடங்கியுள்ளன.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..