கரும்பூஞ்சை நோயை முழுமையாக குணப்படுத்த முடியும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் இந்நோய் அறிவிக்கப்பட வேண்டிய தொற்றாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் கரும்பூஞ்சை நோய் கண்டறியப்பட்டால், உடனடியாக அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கரும்பூஞ்சை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கரும்பூஞ்சை நோயானது முழுமையாக குணப்படுத்தக்கூடியதுதான். இதனால் தேவையற்ற பயமோ, பதற்றமோ வேண்டாம். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 9 பேருக்கு கரும்பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 9 பேரும் நலமுடன் உள்ளனர் என்று சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஸ்டீராய்டு மருந்து எடுப்பவர்களுக்கு இதுப்போன்ற தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழகத்தில் கரும்பூஞ்சை பரவல் பற்றி ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் 2 வாரங்கள் பின்தங்கி உள்ளதால் தற்போது பாதிப்பு அதிகரித்துள்ளது.
மக்கள் தயவு செய்து நோய்க்கட்டுப்பாட்டு பகுதியை மதித்து, அந்த பகுதிக்கு செல்லவோ, அங்கிருந்து வெளிவரவோ கூடாது. நோய் கண்டறியப்பட்ட உடனே மருத்துவமனைக்கு வந்துவிடுங்கள். முழு ஊரடங்கை மதித்து மக்கள் நடக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே நாம் நோயை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றும் அவர் கூறினார்..
கொரோனா போலவே மிரட்ட தொடங்கியிருக்கின்றது கரும்பூஞ்சை நோய். இதுவும் கோவிட் கிருமி போலவே நோயெதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், ஏற்கனவே நோய்பட்டு பாதிக்கபட்டவர்களை எளிதில் தாக்குகின்றது
அங்கொன்றும் இங்கொன்றும் என அச்சுறுத்தல் இல்லா நிலையில் இருந்து இப்பொழுது மெல்ல அது தீவிரம் காட்டுகின்றது
இது இந்தியாவுக்கு குறிப்பாக தமிழகத்துக்கு மகா சோதனை காலம், இந்த கொடுங்காலத்தை அந்த மண் கடந்துவர எல்லா தெய்வங்களும் அருள்புரியட்டும்
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..