வெள்ளை உளுந்தை விட அதன் தோல் நீக்காத பாரம்பரியமாய் பயன்படுத்தி வந்த கருப்பு உளுந்துக்கு சத்து அதிகம். சத்து மிக்க உளுந்தங்களி அனைத்து வயதினருக்கும் ஏற்ற அருமையான மாலை நேர சிற்றுண்டி.
தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து - கால் கிலோ,
பனைவெல்லம் - கால் கிலோ,
நல்லெண்ணெய் - 200 மி.லி.
செய்முறை
உளுந்தை வெறும் கடாயில் வறுத்துக் கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.
பனைவெல்லத்தில் தண்ணீர் விட்டு, பாகு காய்ச்சி, வடிகட்டி, மறுபடி அடுப்பில் வைக்கவும்.
அதில் உளுந்து பொடியை சிறிது, சிறிதாகச் சேர்த்துக் கிளறவும்.
நன்கு வெந்ததும், நல்லெண்ணெய் விட்டுக் கிளறி, இறக்கவும்.
வயதுக்கு வந்த பெண்களுக்குக் கொடுத்தால் இடுப்பு எலும்பு வளர்ச்சி பெறும். ரத்தப் போக்கு சிக்கல்கள் தீரும்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..