18,Jun 2026 (Thu)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையில் கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை

இலங்கையில் இன்று (24) காலை வரையில் கொரோனா (கொவிட்) மரணங்களின் எண்ணிக்கை ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரசு தொற்றுக்குள்ளான நோயாளர்களில் நேற்றைய (23) தினம் ஜவர் உயிரிழந்துள்ளதாகவும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் ,மே 22 ஆம் திகதி வரை கொவிட் 19 தொற்று நோயாளர்களில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைவாக இலங்கையில் இன்று (24) காலை வரையில் கொரோனா (கொவிட்) மரணங்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ள தாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நேற்று மேலும் 2950 கொவிட் தொற்றாளர்கள் பதிவானதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 2945 பேர் புத்தாண்டு கொவிட் கொத்தணியுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்றும் 14 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




இலங்கையில் கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு