18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

முகநூலினூடாக பரிசு வழங்குவதாக கூறி மோசடி

முகநூலினூடாகப் பரிசு வழங்குவதாக கூறி 4 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாய் பண மோசடி செய்த வெளிநாட்டவரொருவர் அத்தியடி பிரதேசத்தில் வைத்து பேலியகொடை பொலிசாரினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேக நபரை கைது செய்யும்போது, அவரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் மற்றும் 5 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பல பிரதேசங்களில் முச்சக்கர வண்டிகளை திருடி அவற்றின் இலக்கத் தகடு மற்றும் நிறங்களை மாற்றி மேற்கொள்ளப்பட்ட வியாபாரமொன்று தொடர்பாகவும் பொலிசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும், இரத்தினபுரி பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இதற்கு தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்






முகநூலினூடாக பரிசு வழங்குவதாக கூறி மோசடி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு