02,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

வியட்நாம் நாட்டில் புதிய வகை வீரியம் கொண்ட வைரஸ் உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பல நாடுகளிலும் பரவி புதிய உருமாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

இவ்வாறு ஆயிரக்கணக்கான உருமாற்றங்களை அடைந்துள்ளது. அவற்றில் 4 வைரஸ்கள் அதிக வீரியம் கொண்டதாக இருக்கிறது.

இந்தியாவில் உருமாற்றம் அடைந்த வைரஸ், பிரேசில் வைரஸ், இங்கிலாந்து வைரஸ், தென்ஆப்பிரிக்கா வைரஸ் என அவை பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் வியட்நாம் நாட்டில் புதிய வகை வீரியம் கொண்ட வைரஸ் உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் அதிவேகமாக பரவுவதாகவும், காற்றிலும் அது பரவக்கூடியது என்றும் வியட்நாம் மந்திரி நுயேன்தன்லாங் தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ், இங்கிலாந்து வைரஸ் ஆகியவற்றின் கூட்டு கலவையாக இருக்கிறது என்றும் மந்திரி கூறி இருக்கிறார்.

வியட்நாமில் சிலருக்கு நோய் தொற்றிய நிலையில் அவர்களை குணப்படுத்துவது கடினமாக இருந்தது. அதை வைத்து ஆய்வு செய்த போது அது புதிய வகை வைரஸ் என்பது தெரியவந்தது.

இதுபற்றி அவர்கள் உலக சுகாதார நிறுவனத்துக்கு தகவல் அனுப்பி உள்ளனர். அது புதிய வைரஸ் என்பது உறுதி செய்யப்பட்டால் அதுபற்றிய அறிவிப்புகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிடும். 

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




வியட்நாம் நாட்டில் புதிய வகை வீரியம் கொண்ட வைரஸ் உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு