04,May 2024 (Sat)
  
CH
ஆன்மிகம்

கொரோனா ஊரடங்கால் கிறிஸ்தவ தேவாலயங்கள் வெறிச்சோடின

கிறிஸ்தவ தேவாலயங்களை பொறுத்த வரையில் ஒரு சில தேவாலயங்களில் ஆன்-லைனில் ஆராதனை, சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பெரும்பாலான தேவாலயங்கள் மூடப்பட்டே உள்ளன

கொரோனா வைரசின் 2-வது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த 10-ந் தேதி முதல் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதற்கு முன்பு ஏப்ரல் மாதத்திலேயே அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. இந்து கோவில்களை பொறுத்த வரையில் ஆகம முறைப்படி சாமிக்கு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

கிறிஸ்தவ தேவாலயங்களை பொறுத்த வரையில் ஒரு சில தேவாலயங்களில் ஆன்-லைனில் ஆராதனை, சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பெரும்பாலான தேவாலயங்கள் மூடப்பட்டே உள்ளன.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை நடைபெறும். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள்.

ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக நேற்று நாமக்கல்லில் கிறிஸ்து அரசர் திருச்சபை, தமிழ் பாப்தீஸ்து திருச்சபை, சி.எஸ்.ஐ. ஆலயம், ஏ.ஜி. சபை என அனைத்து தேவாலயங்களும் மூடப்பட்டு இருந்தன. அவற்றின் வளாகங்களும் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள மற்ற கிறிஸ்தவ தேவாலயங்களும், கொரோனா ஊரடங்கு காரணமாக ஆராதனைகள் நடத்தப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டன.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




கொரோனா ஊரடங்கால் கிறிஸ்தவ தேவாலயங்கள் வெறிச்சோடின

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு