ரெயில் விபத்தில் காயமடைந்த பலர் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டதால், அங்கு மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணம் தார்கி நகரின் அருகே இரண்டு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று மோதி விபத்துக்குள்ளாகின. தடம்புரண்டு நின்றிருந்த மில்லத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது, சர் சையத் எக்ஸ்பிரஸ் ரெயில் பயங்கரமாக மோதியது. இதில், 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் சேதமடைந்து கவிழ்ந்தன.
ரெயில் விபத்து பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கவிழ்ந்த ரெயில் பெட்டிகளில் சிக்கிய பயணிகளை மீட்பது கடும் சவாலாக உள்ளது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது. இந்த சம்பவத்தால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்த கோர விபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஏராளமானோர் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனால் அங்கு மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிலரது உடநிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து பற்றி கேள்விப்பட்டதும் அதிர்ச்சி அடைந்த பிரதமர் இம்ரான் கான், ரெயில்வே மந்திரியை உடனே அந்த பகுதிக்கு சென்று தேவையான உதவிகளை செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..