02,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெறுவது எப்படி தெரியுமா...?

சுவிற்சலாந்தில்குடியுரிமை பெற இரண்டு வழிகள் உண்டு.

1. சாதாரண அல்லது வழக்கமான முறை.

2. எளிமைப்படுத்தப்பட்ட வழிமுறை

முதலாவதே பெரும்பாலும் அனைவரும் பயன்படுத்தும் முறை.

இரண்டாவதில் பதியப்படாத கணவன் மனைவி சுவிஸில் கணவன் மற்றும் மனைவி திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியிருப்பதோடு குறைந்தது சுவிஸில் 5 ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும்.  

இரண்டாவதாகஒருவெளிநாட்டவர்சுவிஸ்குடியுரிமைபெற 3 தகுதிகளைகொண்டிருக்கவேண்டும்.

அதாவது உள்ளூர் மட்டம், மாகாண மட்டம், மாகாண கூட்டமைப்பு மட்டம். இதில் விண்ணப்பதாரார் குறைந்தது 10 வருடங்கள் வாழ்ந்திருக்கவேண்டும்.

அவர் தனது பதின்ம வயதில் சுவிஸில் வாழ்ந்திருந்தாலோ அல்லது C உரிமம் வைத்திருந்தாலோ அல்லது 10 வருடங்களுக்கு குறைவாக வாழ்ந்திருந்தாலோ குடியுரிமை பெறமுடியும்.

மேலும் நீங்கள் சலுகைகளைப் பெற்றிருந்தால் குடியுரிமை பெறமுடியாது.

மேலும் நீங்கள் கடந்த 3 ஆண்டுகள் அரசின் உதவிப்பணம் பெற்றிருந்தால் அதை மீள திருப்பி செலுத்தாமல் நீங்கள் குடியுரிமை பெறமுடியாது.

நீங்கள் சுவிஸ் மாகாணம் ஒன்றில் எவ்வளவு காலம் வாழ்ந்துள்ளீர்கள் என்பது முக்கியம். இதுமாகாணத்திற்கு மாகாணம் மாறுபடும். 

சுவிஸ் குடியுரிமை பெற நல்ல மொழித்திறன் கொண்டிருக்கவேண்டும்.

இதுவும் மாகாணத்திற்கு மாகாணம் மாறுபடும். ஆனாலும் இரண்டு மட்டத்திற்கு விண்ணப்பதாரர் எழுத பேசத் திறன் கொண்டிருக்கவேண்டும். 

மாகாணத்திற்கு மாகாணம் நீங்கள் சமூகத்துடன் எப்படி வாழ்ந்துள்ளீர்கள் என்பதுடன் நீங்கள் சுவிற்சலாந்து பற்றி எவ்வளவு துாரம் அறிந்து வைத்துள்ளீர்கள் என்பது தேவை.

உதாரணமாக உங்கள் மாகாணத்தில் எத்தனை ஏரிகள், பொதுவிடுமுறை, உள்ளூர் பாரம்பரிய விழாக்கள், என்பன பற்றி வினாக்கள் கேட்கப்படும்.

எது எப்படியும் எதுவும் உடனடியாக நடைபெறாது. இதற்கு எவ்வளவு ஆண்டுகளும் ஆகலாம். இதனைநீங்கள் நன்கு அறிந்திருக்கவேண்டும். 

குடியுரிமை பெறுபது மிகவும் பெறுமதியானதாக இருக்கலாம். 

நீங்கள் 3தடவை அதிகாரிகளை சந்திக்கவேண்டிவருமாகையால் உங்களுக்கு 3 மட்டங்களில் பணம் அறவிடப்படும்.

மேல்மட்டத்தில் 80-150பிராங் ஆகவும், உள்ளூர் மட்டத்தில் 500-1000பிராங் ஆகவும் மாகாணமட்டத்தில் 2000பிராங் ஆகவும்இருக்கும்.

இரட்டைக் குடியுரிமை பெறவும் சுவிஸில் அனுமதி உண்டு. சுவிஸ் மக்கள் இரண்டு கடவுச்சீட்டுகளை வைத்திருக்கலாம்.

இதில் உங்கள் மற்றைய நாட்டில் இரட்டைகுடியுரிமை அனுமதி இருப்பின் இதில் சுவிற்சலாந்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. 

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெறுவது எப்படி தெரியுமா...?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு