02,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

முடக்கப்படுமா சீனாவின் செல்வாக்கு? விரைந்தார் ஜோ பைடன்

அமெரிக்க அரசதலைவர் ஜோ பைடன் தனது பதவியேற்புக்குப் பின்னராக முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இன்று பிரித்தானியாவை சென்றடைந்துள்ளார்.


ஐரோப்பாவுக்கு எட்டு நாட்களுக்கு அவர் மேற்கொள்ளும் இந்த சுற்றுப்பயணத்தில் பிரித்தானியாவில் இடம்பெறும் ஜி-7 மாநாடு பிரஸ்ஸல்சில் இடம்பெறும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடனான சந்திப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கெடுக்கவுள்ளார்.

அமெரிக்க அரச தலைவர் ஜோ பைடன் இன்று புதன்கிழமை காலை வெள்ளை மாளிகையில் இருந்து தனது பதவியேற்புக்கு பின்னரான முதலாவது வெளிநாட்டு பயணத்தை பிரித்தானியா நோக்கி ஆரம்பித்தார்.


அமெரிக்க அரச தலைவரின் எட்டு நாட்களுக்குரிய இந்த சுற்றுப்பயணத்தில் நாளை மறுதினம் பிரித்தானியாவில் ஆரம்பமாகும் ஜி-7 மாநாட்டில் கலந்துக்கொள்ளவுள்ளார்.

அத்துடன் பிரஸ்ஸல்சில் இடம்பெறும் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடனான பேச்சுக்கள் மற்றும் எதிர்வரும் 16 திகதியன்று ஜெனீவாவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான சந்திப்பு உட்பட முக்கிய நிகழ்வுகளில் அவர் பங்கெடுக்கவுள்ளார்.

டொனால் டரம்ப் அமெரிக்க அரச தலைவராக இருந்த காலத்தில் அமெரிக்க ஐரோப்பிய உறவுகளில் சற்று விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் பைடனின் பயணத்தில் இந்த விரிசல்கள் சீர்படுத்தபடும் என நம்பப்படுகிறது.


இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பிரிந்து சென்றாலும் வட அயர்லாந்தின் சமாதானத்தை குழப்ப பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இடமளிக்ககூடதெனவும் ஜோ பைடன் கோரிக்கை விடுத்துள்ளார்.


நாளை மறுதினம் ஜோ பைடனின் பிரசன்னத்துடன் இடம்பெறவுள்ள ஜி 7 உச்சி மாநாட்டில் ஏழைநாடுகளுக்கான கொரோனா தடுப்பூசிகளின் ராஜதந்திரம், சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை முடக்கும் வழிவகைகள் குறித்து ஆய்வுசெய்யபடவுள்ளன.



நாளை வியாழக்கிழமை கோர்ன்வோல் நகரில் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனுடன் ஜோ பைடன் சந்திப்பை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது








முடக்கப்படுமா சீனாவின் செல்வாக்கு? விரைந்தார் ஜோ பைடன்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு