26,Apr 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

புத்தாண்டுக்கு பின்னர் 123,779 கொவிட் 19 தொற்றாளர்கள்

நேற்று காலை (13) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 2,354 கொவிட்-19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளர்.

அவர்களில் 2 பேர் வெளிநாட்டைச் சேரந்தவர்களும் 12 பேர் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த இலங்கையர்களாவர். ஏனைய 2,340 பேர் உள்நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள், அவர்களில் 561 தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளனர்.அத்தோடு கொழும்பு மாவட்டத்தில் 528 தொற்றாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 313 தொற்றாளர்களும் மற்றும் ஏனைய மாவட்டங்களில் 938 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர் என கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது..

நேற்று காலை (13) வரையில் கொவிட் – 19 தொற்றுக்கு இலக்காகி மரணித்தவர்கள் உள்ளடங்களாக மொத்தமாக 221,276 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களில் , 123,779 பேர் புத்தாண்டின் பின்னர் அறியப்பட்டவர்களாவர்.

நேற்று (13) காலை வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்றுவந்த 2,426 பேர் முழுமையாக குணமடைந்து வெளியேறினர். கடந்த 24 மணி நேரத்தில் எந்த மரணமும் ஏற்படவில்லை. ஆனால் மே 23 முதல் மே 31 வரை 12 மரணங்களும், ஜூன் 1 முதல் ஜூன் 11 வரை 51 மரணங்கள் பதிவாகியுள்ளன.

நேற்று (13) வரையில் (24 மணி நேரத்தில்) ஹோட்டல் மற்றும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 64 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6,416 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று (13) காலை வரையான காலப்பகுதியில் 20 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைபடுத்தப்பட்டிருந்த 494 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பினர்.

நேற்று (13) நிலவரப்படி இந்த ஊடக செய்தியை வெளியிடும் நேரத்தில், முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 8 பொலிஸ் பிரிவுகள் மற்றும் 258 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைபடுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. குருநாகல் மாவட்டத்தில் உள்ள பன்னல பொலிஸ் பிரிவுடனான 93 கிராம சேவகர் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன., நடைமுறையில் உள்ள பயணத்தடை மீள் அறிவிப்பு வரையில் நீடிக்கும்


உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




புத்தாண்டுக்கு பின்னர் 123,779 கொவிட் 19 தொற்றாளர்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு