15,Jan 2025 (Wed)
  
CH
ஆரோக்கியம்

பெண்கள் கால் வலியால் பாதிக்காமல் இருக்க இதை செய்யலாம்...

தினமும் அதிக நேரம் நின்று கொண்டே வேலை பார்க்கக்கூடாது. அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டால் அவ்வப்போது நடந்து கால்களின் ரத்த ஓட்டத்தை இயல்பாக்கிக் கொள்ள வேண்டும்.

பெண்கள் நிறைய பேர் கால்வலி பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். சமையல் அறையில் நின்று கொண்டு உணவு சமைக்கும்போது கால் பாதங்கள் அதிக அழுத்தத்திற்கு ஆளாகும். அதிலும் உடல் பருமன் கொண்டவர்களுக்கு ஒட்டுமொத்த உடல் எடையையும் கால்கள் தாங்குவதன் காரணமாக வலியின் அளவு அதிகரிக்கும். தொடர்ச்சியாக நடந்தபடியோ, நின்றபடியோ வேலை செய்பவர்களும் கால்வலி பிரச்சினைக்கு ஆளாவார்கள்.

கால் பாத வலிக்கு தீர்வு தரும் வழிமுறைகள்:

கால்களுக்கு அணியும் காலணிகள் சரியான அளவுகளில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கணுக்கால்வலி, பாதங்களில் வீக்கம் போன்ற பாதிப்புகள் நேரும். காலணிகளை இறுக்கமாக அணியும்போது கால்விரல்கள் உராய்ந்து வலியை ஏற்படுத்தும். அதுபோல் தளர்வான காலணிகளை அணிந்தால் நடப்பதற்கு சிரமமாக இருக்கும். காலணிகள் தேர்வில் தவறு செய்வதும் கால்கள், பாதங்களில் வலிகள் தோன்றுவதற்கு காரணங்களாக இருக்கின்றன.

உடல் எடை பெருமளவு அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ அதன் தாக்கம் கால் தசைகளில் வெளிப்படும். கால் தசைகளின் பலவீனமும் வலிக்கு காரணமாக அமையும்.

தொடர்ந்து கால்வலி ஏற்பட்டால் நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் இருக்கிறதா? என்று பரிசோதனை செய்து பார்ப்பதும் நல்லது. ஏனெனில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அது நரம்பு மண்டலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும். அப்போது கால் பாதங்களிலும் அதன் தாக்கம் வெளிப்படும். ஆதலால் நீரிழிவு நோய்க்கான பரிசோதனை செய்து கொள்வது அவசியமானது.

உடற்பயிற்சிசெய்யும்போது கால்களுக்கும் பயிற்சி கொடுக்கவேண்டும். அது ஒட்டுமொத்த உடல் கட்டமைப்புக்கும் நல்லது. கால்களை நன்றாக நீட்டி மடக்கி பயிற்சி செய்ய வேண்டும்.

சிலருடைய கால்களின் அடிப்பாதம் வளைவுகள் ஏதுமின்றி தட்டையாக இருக்கும். சிலருக்கு கால் பாதங்கள் அதிக வளைவுகளுடன் காணப்படும். இத்தகைய பிரச்சினை கொண்டவர்களின் கணுக்காலில் உள்ள தசை நார்கள் அதிக அழுத்தத்திற்கு ஆளாகி கால் பாதங்களில் வலியை உருவாக்கும்.

தினமும் ஹைஹீல்ஸ் அணிவதால் கால்களில் சுளுக்கு, வலி, அழற்சி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். 2.5 அங்குலத்திற்கு மேல் ஹைஹீல்ஸ் அணிவது 7 மடங்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பது டாக்டர்களின் கருத்தாக இருக்கிறது. அதனால் குதிகால் செருப்புகளை அதிகம் பயன்படுத்த வேண்டாம்.

தினமும் அதிக நேரம் நின்று கொண்டே வேலை பார்க்கக்கூடாது. அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டால் அவ்வப்போது நடந்து கால்களின் ரத்த ஓட்டத்தை இயல்பாக்கிக் கொள்ள வேண்டும்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




பெண்கள் கால் வலியால் பாதிக்காமல் இருக்க இதை செய்யலாம்...

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு