16,Apr 2025 (Wed)
  
CH
SRILANKANEWS

கைது செய்யப்பட்ட 10 பேரையும் தொடர்ந்து விளக்கமறியலில்

மட்டக்களப்பு கல்குடா கடற்கரையில் முள்ளிவாய்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 பேரையும் தொடர்ந்து எதிர்வரும் 30 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் நேற்று உத்தரவிட்டார்.

கடந்த மே மாதம் 18 ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதற்கு எதிராக லவக்குமாருக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது. இந்நிலையில், லவக்குமார் உட்பட 10 பேர் அன்றைய தினம் நீதிமன்ற தடை உத்தரவை மீறி கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி கடலில் பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்தி, அதனை படம் எடுத்து முகநூலில் பதிவு செய்த நிலையில் அவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கல்குடா பொலிசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்ற அனுமதியுடன் 3 நாள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்தனர்.

இதனை அடுத்து நேற்று\குறித்த வழக்கு வாழைச்சேன் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்காக எடுக்கப்பட்ட போது குற்றம் சாட்டப்பட்வர்களை எதிர்வரும் 30 ம் திகதி வரை 14 நாட்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.





கைது செய்யப்பட்ட 10 பேரையும் தொடர்ந்து விளக்கமறியலில்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு