20,Apr 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

ஆய்வுப்பணிகளுக்கு உதவ இந்திய கடற்படைக் கப்பல்

இந்தியாவிலிருந்து பௌத்தமதம் இலங்கைக்கு வருகைதந்த நாளினை குறிக்கும் அருள்நிறைந்த பொசன் போயா தினமான 2021 ஜூன் 24ஆம் திகதி இந்திய கடற்படையின் ஆய்வு கப்பலான சர்வேக்‌ஷாக் கொழும்பை வந்தடைந்தமை, இரு அயல் நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகள் மற்றும் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான நட்புறவில் மற்றொரு வெற்றிகரமான அத்தியாயமாக அமைந்துள்ளது.

சொந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட சைட் ஸ்கான் சோனர் உட்பட ஆய்வு உபகரணங்கள் பொருத்தப்பட்ட இந்த கப்பல் எம்வி எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் மூலம் கொழும்புக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் ஏற்பட்டிருக்கும் தாக்கங்களை கணிப்பிடுவதற்கு தனது பங்களிப்பினை வழங்கவுள்ளது.

 2. கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் கடற்பயணங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வமான கோரிக்கையின் அடிப்படையில் ஐ.என்.எஸ் சர்வேக்‌ஷாக் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு (நாரா), இலங்கை கடற்படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றின் ஒன்றிணைவில் இந்த கூட்டு ஆய்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த ஆய்வுப் பணியில் மேலதிக திட்டங்கள் குறித்து 2021 ஜூன் 25ஆம் திகதி திட்டமிடல் சந்திப்பு ஒன்று நடைபெற்றிருந்தது. இந்த சந்திப்பில் நாரா நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ஏ.நவரட்னராஜா, நாரா பணிப்பாளர் நாயகம் டாக்டர் எச்.எம்.பி.கித்ஶ்ரீ இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் விகாஸ் சூத் மற்றும் இலங்கை கடற்படையின் கப்டன் விஜேசூரிய ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். 

3. 2021 மே 20ஆம் திகதி எம்.வி எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தில் சிக்கியிருந்ததுடன் இக்கப்பலிலிருந்த 1486 கொள்கலன்களில் பெரும்பாலானவை, இந்திய இலங்கை கூட்டு நடவடிக்கையாக ஒப்பரேசன் சாகர்ஆரக்‌ஷா2இன் மூலமாக இக்கப்பலில் ஏற்பட்டிருந்த தீ அணைக்கப்படுவதற்கு முன்னதாக கடலில் விழுந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபை , UNEP போன்ற பல்வேறு நிறுவனங்களும் இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளும் மேற்கொண்டிருந்த கணிப்புக்களின் பிரகாரம் இக்கப்பலிலிருந்து கடலில் விழுந்த கொள்கலன்கள் மூலமாக இலங்கையின் மேற்குக் கரையோரத்தில் வசிக்கும் மீனவ சமூகங்களின் வாழ்வாதாரத்திற்கு மிகவும் பாரதூரமான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டிருப்பதாகவும் கொழும்பு துறைமுகம் ஊடான கடல் பயணங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

4. ஒபரேஷன்சாகர்ஆரக்‌ஷா2இன் தொடர்ச்சியாக மெற்கொள்ளப்படும் இக்கூட்டு நடவடிக்கை இப்பிராந்தியத்தில் பாதுகாப்பான கடற்பயணத்துக்கு உறுதுணையாக இருக்கும் அதேநேரம், இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஏற்படும் இதுபோன்ற அனர்த்தங்களை தணிப்பதற்கு விரைந்து ஆதரவினை வழங்குவதற்கான இந்தியாவின் அயலவர்களுக்கு முதலிடம் கொள்கையை மேலும் வலுப்படுத்துவதாகவும் அமைகின்றது.

இந்திய உயர் ஸ்தானிகராலயம்

கொழும்பு

Tamils4news எம்முடன் இந்த செய்திய பகிர்ந்துகொண்ட அரச ஊடகப்பிரிவு உத்தியோகத்தருக்கு நன்றிகள்


உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





ஆய்வுப்பணிகளுக்கு உதவ இந்திய கடற்படைக் கப்பல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு