02,May 2024 (Thu)
  
CH
இந்திய செய்தி

கடலுக்கு படகில் செல்லும் மீனவர்களுக்கு உதவ நவீன தொழில்நுட்ப கருவி

மகாராஷ்டிர மாநிலத்தில் 7 மீனவர்கள் கடலில் தத்தளித்தபோது, அவர்களை உயிரோடு மீட்ட நிகழ்வில் ‘ஸ்கைலோ’ தொழில்நுட்பம் தனது திறனை நிரூபித்து இருக்கிறது.

கடலுக்குள் மீன்பிடிக்க படகுகளில் செல்லும் மீனவர்களுக்கு புயல் மற்றும் அவசர கால இடர்பாடுகளில் உதவுவதற்காக ‘ஸ்கைலோ டெக்னாலஜிஸ்’ என்ற இந்திய நிறுவனம், ‘ஸ்கைலோ ஹப்’ என்ற புதிய மின்னணு தொழில்நுட்ப சாதனத்தை தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மீனவர் நலத்திட்ட இயக்குனர் கணேஷ் நாக்காவா கூறியதாவது:-

‘ஸ்கைலோ ஹப்’ சாதனத்தை மீனவர்கள் படகில் நிறுவினால் போதும். இதில் உள்ள நுண்ணலை கதிர் மூலம் மீனவர்கள் அனுப்பும் தகவல் கரையில் இருப்பவர்களுக்கு வந்து சேரும். தரை கட்டுப்பாட்டு அலுவலகத்தில் இருந்து படகுகளுக்கு அனுப்பப்படும் அவசர தகவல்களும் மீனவர்களை உடனடியாக சென்றடையும்.

பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வந்த பழமையான அணுகுமுறையையே தொடர்ந்து கையாண்டால் மீனவர்கள் வாழ்க்கைத்தரம் சிறக்காது. எனவே உலகிலேயே முதல்முறையாக குறுகிய அலைநீளம் கொண்ட நுண்ணலை அடிப்படையிலான இணையத் தொடர்பு மூலம் எந்திரங்களை இயக்கும் தொழில்நுட்பத்தை தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளோம். இது நம்பகமானவை, செலவு குறைந்தவை. எனவே இதனை தமிழ்நாட்டில் 600 மீனவ கிராமங்களில் வசிக்கும் 10 லட்சம் மீனவர்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி அன்று மகாராஷ்டிர மாநிலத்தில் 7 மீனவர்கள் கடலில் தத்தளித்தபோது, அவர்களை உயிரோடு மீட்ட நிகழ்வில் ‘ஸ்கைலோ’ தொழில்நுட்பம் தனது திறனை நிரூபித்து இருக்கிறது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




கடலுக்கு படகில் செல்லும் மீனவர்களுக்கு உதவ நவீன தொழில்நுட்ப கருவி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு