29,Apr 2024 (Mon)
  
CH
உலக செய்தி

இன்று சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்...

சட்டவிரோத போதைப்பொருள் காரணமாக சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில், தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் சமூகங்கள் ஒன்றுகூடி மக்களுக்கு தெரியப்படுத்துகின்றனர்.

உலகம் முழுவதும் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து. சமூக ஆரோக்கியத்தை சிதைத்துக்கொண்டிருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இருக்கின்றனர். பல்வேறு சூழ்நிலை காரணமாக போதைப் பழக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் இவர்களை குறிவைத்து, போதைப்பொருள் கடத்தல் கும்பல் மிகப்பெரிய நெட்வொர்க்கை அமைத்து செயல்படுகிறது. போதைப்பொருள் கடத்தல், போதைப் பொருள் விற்பனை மிகப்பெரிய முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. 

எனவே, மனித சமூகத்திற்கு போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஜூன் 26-ம் தேதியை போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக ஐ.நா பொதுசபை அறிவித்தது.

போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிப்பது மட்டுமல்லாமல், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுத்தல், போதைப்பொருள் வர்த்தகத்தைத் தூண்டும் காரணங்களை கண்டறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளது இந்த நாள்.

சட்டவிரோத போதைப்பொருள் காரணமாக சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில், தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் சமூகங்கள் ஒன்றுகூடி மக்களுக்கு தெரியப்படுத்துகின்றனர்.

"உயிர்களைக் காப்பாற்ற போதைப்பொருட்கள் பற்றிய உண்மைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்" என்பதே இந்த ஆண்டின் போதைப்பொருள் ஒழிப்பு தின கருப்பொருள் ஆகும். 

போதைப்பொருள் பற்றிய தீமைகளை எடுத்துரைப்பதோடு, போதை மருந்து பயன்படுத்துவதால் ஏற்படும் கேடுகள் குறித்த உண்மைகளை மக்களுக்கு கொண்டு செல்வதை, இந்த கருப்பொருள் நோக்கமாக கொண்டது. 

இதில், சுகாதார அபாயங்கள் முதல் உலகளாவிய போதை மருந்து பிரச்சனைக்கான தீர்வுகள், ஆதாரங்களை அடிப்படையாக கொண்ட தடுப்பு நடவடிக்கைகள், போதை பயன்பாட்டாளர்களின் மறுவாழ்வு மற்றும் போதைக் பழக்கத்தை கைவிட்ட பிறகான பராமரிப்பு உள்ளிட்டவையும் அடங்கும். 

ஒவ்வொரு ஆண்டும், போதைப்பொருள் நெருக்கடியை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்த புள்ளிவிவரங்கள் மற்றும் தரவுகளுடன் ஐ.நா. அமைப்பு அறிக்கை வெளியிடுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு, போதைப்பொருள் தாக்கத்தை எதிர்கொள்ள அதிக அளவில் சர்வதேச ஒத்துழைப்பை வேண்டுவது மட்டுமல்லாமல், கொரோனா தொற்றுநோயின் பாதிப்பு குறித்தும் சிறப்பு கவனம் செலுத்துகிறது. 

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமான இன்று உலகெங்கிலும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன. குறுஞ்செய்திகள் வாயிலாகவும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் அரசு அமைப்புகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வெளியிட்டுள்ளனர். போதைப்பொருள் இல்லா உலகம் படைக்க, நாமும் நம்மால் இயன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




இன்று சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்...

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு