தொழில்நுட்ப வளர்ச்சிகளைப் பற்றிய ஆச்சர்ய செய்திகளைப் படிக்கும்போது, ‘போற போக்கைப் பார்த்தா இனிமே எல்லாம் ரோபோதான் செய்யுமாம்’ என்போம். ஆனால், இப்போதே மருத்துவத் துறையில் ரோபாட்டிக்ஸின் பயன்பாடு எவற்றிலெல்லாம் இருக்கிறது என்று அறிந்தால் அசந்து போவீர்கள். இதைப்பற்றி விளக்குகிறார் சென்னையை அடுத்த குன்றத்தூர் சென்னை தொழில்நுட்பக் கல்லூரி, மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் துறையின் உதவிப் பேராசிரியர் சுரேஷ் அருணாசலம்.
சர்வீஸ் ரோபோக்கள்!
தற்போது வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம், மருத்துவ ரோபாட்டிக்ஸ் பயன்பாடு. எடுத்துக்காட்டாக, அறுவைசிகிச்சை ரோபோக்கள் குறைந்த அளவிலான துளையிடும் அறுவைசிகிச்சைகளை செய்கின்றன. தன்னாட்சி ரோபோக்கள் மருத்துவமனைகளில் சுயமாகச் செயல்பட்டு நோயாளிகளுக்கான சேவைகளில் பங்குபெறுகின்றன. நோயாளிகளுக்கு மருந்துகளை அடையாளம் காணவும், விநியோகிக்கவும் எடுக்கும் நேரத்தை அவை குறைக்கின்றன.
சுகாதார ரோபாட்டிக்ஸ்!
செயற்கை நுண்ணறிவு (AI - Artificial Intelligence), சுகாதார ரோபாட்டிக்ஸை மாற்றியமைத்தன; சுகாதாரத் துறையின் பல பகுதிகளிலும் அதன் திறன்களை விரிவு படுத்துகின்றன. ரோபோக்கள் இப்போது இயக்க அறையில் மட்டுமல்லாமல், சுகாதார அமைப்பாளர் களுக்கு உதவு வதற்கும், நோயாளிகளின் பராமரிப்பை மேம்படுத்துவதற்கும் மருத்துவ அமைப்புகளில் பயன்படுத்தப் படுகின்றன. மொபைல் ரோபோக்கள், முன்வரையறுக்கப்பட்ட பாதைகளில் துப்புரவு மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் சேவைகளை வழங்குகின்றன. இந்த கோவிட்-19 நோய்த்தொற்றுக் காலத்தில் மருத்துவமனைகளில் நோய்க் கிருமிகளின் வெளிப்பாட்டைக் குறைக்கப் பயன்படுத்தப் படுகின்றன. மேலும், ரோபோக்கள் நோயாளி களின் அறைகளை சுயாதீனமாக சுத்தம் செய்ய, தொற்றுநோய் வார்டுகளில் நபருக்கு நபர் தொடர்பைக் கட்டுப்படுத்தவும் உதவு கின்றன.
ரோபாட்டிக்ஸ் உதவியுடன் செய்யப்படும் அறுவைசிகிச்சைகள்!
அறுவைசிகிச்சை முறைகள் மற்றும் செயல் திறன்களில் ரோபோக்கள் அதிக துல்லியத்தை கொண்டு வருகின்றன. உடற்பகுதியில் குறைந்த பட்சம் துளையிடும் அறுவை சிகிச்சைகளில், கருப்பை நீக்கம், உடல் எடையைக் குறைக்கும் பேரியாட்ரிக் (Bariatric) அறுவைசிகிச்சை உள்ளிட்டப் பல அறுவை சிகிச்சைகளில் ரோபாட்டிக்ஸ் உதவுகின்றன. நோயாளியின் உடலில் சிறிய துளை மூலம் செருகப்பட்ட பிறகு, இந்த ரோபோக்கள் தங்களைத் தாங்களே பூட்டிக்கொண்டு ரிமோட் கன்ட்ரோல் வழியாக அறுவைசிகிச்சைகள் செய்ய ஒரு நிலையான தளத்தை உருவாக்கும்.
ரத்த இழப்பு குறைகிறது!
பொதுவாக, திறந்தநிலை அறுவைசிகிச்சை முறையுடன் ஒப்பிடும்போது, ரோபாட்டிக்ஸ் உதவியுடன் செய்யப்படும் நுண்துளை அறுவைசிகிச்சைகளில் ரத்த இழப்பும் கணிசமாகக் குறையும்.
ஆய்வகத்தில் ரோபோ!
ஆய்வகத்தில் செய்யப்படும் பல சோதனைகள், மருந்துகள், ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாடு ஆகியவை ரோபாட்டிக்ஸ் உதவியுடன் செய்யப்படுகின்றன. மேலும், போலி மருந்துகள் அல்லது மோசடி முறையில் தயாரிக்கப்பட்ட மருந்துகளை அடையாளம் காண மருந்தகங்கள் மற்றும் மருந்து நிறுவனங்களுக்கு உதவுவதிலும் ரோபோக்கள் பயனுள்ளதாக உள்ளன.
ரோபோ மருந்தகங்கள்!
சில பெரிய மருத்துவமனைகளில் பல்வேறு மருந்துகளை விநியோகிக்க ரோபாட்டிக்ஸ் பயன்படுத்தப்படுகின்றன. இதன் தேவை இனி அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும், தொழில்துறையில் பலர் எதிர்காலத்தில் முழுமையான ரோபோ மருந்தகங்களை எதிர்பார்க்கிறார்கள். அவை மருந்தாளரின் தேவையை நீக்கிவிடும் என்றும் சொல்லப் படுகிறது.
எதிர்காலத்தில்... இன்றியமையாதது!
முன்னர் ஒவ்வொரு வேலைக்குமான இயந் திரங்கள் உருவாக்கப்பட்டபோது, அதனால் பல தொழிலாளர்கள் வேலையிழந்தது குறித்த போராட்டங்கள் எழுந்தன. இயந்திரங்கள் மனிதர்களுக்கு மாற்றாக, இயந்திரத்தின் செயல்திறன் மனித உழைப்பைவிட பன் மடங்கு அதிகமாக இருக்க, அவற்றை நாட ஆரம்பித்தார்கள். அந்த வகையில் ரோபோக் களும் எதிர்காலத்தில் அதிகமாக நாடப்படும்.
தொழில்நுட்ப யுகத்துக்குத் தயாராவோம்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..