பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் முதல் நிலை வீராங்கனையான ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா) 6-3, 6-7 (4-7), 6-3 என்ற செட் கணக்கில் கரோலினா பிளிஸ் கோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.
கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் முதல் நிலை வீராங்கனையான ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா) 6-3, 6-7 (4-7), 6-3 என்ற செட் கணக்கில் கரோலினா பிளிஸ் கோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.
ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. இதில் உலகின் முதல்நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா)-ஏழாவது வரிசையில் உள்ள பெரேட்டினி (இத்தாலி) மோதுகிறார்கள்.
ஜோகோவிச் இதுவரை 19 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று 2-வது இடத்தில் உள்ளார். இன்று வெற்றி பெற்றால் அதிக கிரண்ட்சிலாம் வென்று அதாவது 20 பட்டத்தை கைப்பற்றி முதல் இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்) சாதனையை சமன் செய்வார்.
அவர் புதிய சாதனையை படைப்பாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஜோகோவிச் விம்பிள்டன் பட்டத்தை 5 முறை கைப்பற்றி இருக்கிறார்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..