03,Dec 2024 (Tue)
  
CH
அழகு குறிப்பு

வடுக்களை குணப்படுத்தும் வீட்டு வைத்தியம்

வடுக்களின் தன்மையை பொறுத்து அதனை குணப்படுத்தும் தன்மையும் மாறுபடும். சில வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டே அதிக வீரியம் இல்லாத வடுக்களை விரைவாக மறையச்செய்துவிடலாம்.

‘சிக்கன் பாக்ஸ்’ எனப்படும் அம்மை நோய் பாதிப்புக்குள்ளாகுபவர்களின் சருமத்தில் தென்படும் வடுக்கள் மறைவதற்கு அதிக நாட்கள் பிடிக்கும். நோயின் வீரியம் அதிகமாக இருக்கும்போது சருமத்தை உராய்வது, சொறிவது கடுமையான வடுக்கள் தோன்ற வழிவகுத்துவிடும். சிலருக்கு அந்த வடுக்கள் மறையாமல் அப்படியே நிலைத்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. வடுக்களின் தன்மையை பொறுத்து அதனை குணப்படுத்தும் தன்மையும் மாறுபடும். ஏதேனும் காயங்கள் ஏற்பட்டிருந்தாலும் அவை வடுக்களாக மாறிவிடக்கூடும். சில வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டே அதிக வீரியம் இல்லாத வடுக்களை விரைவாக மறையச்செய்துவிடலாம்.

தேங்காய் எண்ணெய்: இது சருமம் சார்ந்த பல பிரச்சினைகளுக்கு சிறந்த முறையில் நிவாரணம் தரும். அம்மை நோய் பாதிப்பால் ஏற்படும் வடுக்கள் மீது தேங்காய் எண்ணெய்யை தடவலாம். தேங்காய் எண்ணெய் சரும வறட்சியை போக்கி ஈரப்பதத்தை தக்கவைக்கவும் உதவும்.

கற்றாழை: இதன் குளிர்ச்சித்தன்மை சருமத்திற்கு இதமளிக்கும். சருமத்தில் ஏற்படும் நமைச்சலை போக்குவதற்கு கற்றாழை ஜெல்லை உபயோகிக்கலாம். கற்றாழை ஜெல்லுடன் அதே அளவு ஆலிவ் எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ எண்ணெய்யை கலந்து வடுக்கள் மீது தடவி வரலாம். தொடர்ந்து செய்துவந்தால் வடுக்கள் மறையத்தொடங்கிவிடும்.

அகன்ற பாத்திரத்தில் 5 சொட்டு எலுமிச்சை சாறு, 5 சொட்டு டீ-ட்ரீ ஆயில், 5 சொட்டு ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் 10 சொட்டு ஜோஜோபா எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து வடுக்கள் மீது தடவலாம். மென்மையான சருமம் என்றால் அதனுடன் தேங்காய் எண்ணெய்யும் சேர்த்துக்கொள்ளலாம். இந்த எண்ணெய் தடவிய பிறகு சூரிய ஒளிபடும்படி வெளியே செல்லக்கூடாது.

தேன்: இது கொலோஜனை அதிகரிக்கும் பண்புகளை கொண்டுள்ளது. தேனை நேரடியாக வடுக்கள் மீது தடவலாம். உலர்ந்ததும் அரை மணி நேரம் கழித்து சருமத்தை நீரில் கழுவிவிடலாம்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




வடுக்களை குணப்படுத்தும் வீட்டு வைத்தியம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு