03,May 2024 (Fri)
  
CH
சினிமா

இந்தியா டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த சூர்யா

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஹாஸ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது சூர்யா 40 திரைப்படம் உருவாகி வருகிறது. பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

சூர்யாவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவருடைய படங்களின் அறிவிப்புகள், பாடல்கள், படங்கள் வெளியாகும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடுவார்கள். சூர்யா தனது பிறந்தநாளை ஜூலை 23 ஆம் தேதி கொண்டாட இருக்கிறார்.

இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் காமன் டிபி - யை இன்று வெளியிட்டார்கள். இந்த காமன் டிபி பலரால் பகிரப்பட்டு சமூக வலைத்தளத்தில் வைரலானது. மேலும் #SuriyaBdayCDPCarnival என்ற ஹாஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




இந்தியா டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த சூர்யா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு