அரிசியைக் காட்டிலும், கனிமம், கால்சியம், புரதம், இரும்பு என அனைத்துச் சத்துக்களுமே அதிகம்கொண்ட தானியம் கம்பு, வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் தொடங்கிய பெண் குழந்தைகளுக்கும் கண்டிப்பாகத் தரவேண்டிய தானியம்.
தேவையான பொருட்கள்
கம்பு - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கம்பைச் சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டுக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.
அடி கனமான பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்புப் போட்டுக் கொதிக்கவிடுங்கள்.
தண்ணீர் நன்றாகக் கொதித்ததும் கம்பு மாவைச் சேர்த்துக் கட்டிதட்டாமல் கிளறுங்கள்.
நன்றாக வெந்ததும் இறக்கிவைத்துப் பரிமாறுங்கள்.
உருண்டைகளாகப் பிடித்தும் சாப்பிடலாம்.
வெந்தயக் குழம்பு அல்லது கறிக்குழம்பு தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..