27,Apr 2024 (Sat)
  
CH
இந்திய செய்தி

இன்று மாலை வருகிறது சென்னைக்கு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி

தமிழகத்திற்கு அதிக அளவு தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொது மக்களிடம் தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

ஆனால் தேவையான அளவுக்கு தடுப்பூசி ஒதுக்கீடு இல்லாததால் குறைந்த அளவில் மாவட்டங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.

தமிழகத்திற்கு அதிக அளவு தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

அதனை தொடர்ந்து தற்போது தடுப்பூசி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. நேற்று 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி வந்தன. அதனை தொடர்ந்து 5 லட்சத்து 42 ஆயிரத்து 280 கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று மாலை சென்னை வருவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

நேற்று வரை 1 கோடியே 83 லட்சத்து 56 ஆயிரத்து 631 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் 5 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக 1 லட்சம், 2 லட்சம், 3 லட்சம் என்ற அளவில்தான் தடுப்பூசி போடப்படுகிறது.

அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மையங்களுக்கு ஆர்வத்துடன் மக்கள் வந்த போதிலும், அவர்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாநில மருத்துவ கிடங்கிற்கு வரும் தடுப்பூசியின் அளவை பொறுத்து மாவட்டங்களுக்கு பிரித்து ஒதுக்கப்படுகிறது. இதனால் தேவையான அளவு தடுப்பூசி செலுத்த முடியாத நிலை உள்ளது.

கொரோனா 3-வது அலை தாக்கக் கூடும் என்ற எச்சரிக்கை மருத்துவ வல்லுனர்களால் விடுக்கப்பட்டு வருவதால், அதற்குள்ளாக தடுப்பூசியை செலுத்தி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





இன்று மாலை வருகிறது சென்னைக்கு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு