18,May 2024 (Sat)
  
CH
சினிமா

இரண்டு விழாவை கொண்டாடிய யோகி பாபு

நடிகர் யோகிபாபு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், மேலும் விழாவை வீட்டில் கொண்டாடி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வருபவர் காமெடி நடிகர் யோகி பாபு. அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார் யோகி பாபு. இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி மஞ்சு பார்கவி என்ற பெண்ணை குலதெய்வ கோயிலில் எளிமையாக திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு கடந்த டிசம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. 

இன்று யோகி பாபு தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதே நாளில் தனது மகனின் பெயர் சூட்டு விழாவையும் விமரிசையாக கொண்டாடி இருக்கிறார் யோகி பாபு. தீவிர முருக பக்தரான யோகிபாபு தனது மகனுக்கு ’விசாகன்’ என்று பெயர் சூட்டி இருக்கிறார்.

இந்த பெயர் சூட்டும் விழாவில், இயக்குனர் விருமாண்டி, இயக்குனர் முத்துக்குமரன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டதோடு பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





இரண்டு விழாவை கொண்டாடிய யோகி பாபு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு